சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் : பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க 20 உறுப்பினர்கள் கோரிக்கை - சபை முதல்வர்

Published By: Digital Desk 3

21 Sep, 2023 | 05:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம்  தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாக  சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21)  இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி பாரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தெரிவு குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும். அதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதன்மூலம் ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றைப் பெற்று அவற்றை ஆராய்ந்து அதனை சாட்சிகளாக மாற்ற முடியுமென்றால் சட்டமா அதிபர் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும்.முறையான விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் இலங்கை இரண்டு சர்வதேச விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த  சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்க  தீரமானிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் 11 பேர் உள்ளடங்குவார்கள். இந்த தெரிவுக்குழு 2 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38