சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரனெசனல் ஸ்ரீலங்காவின் 5 வீரர்கள் 2 ஆம், 4 ஆம், 5 ஆம் கறுப்புப் பட்டிகளுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரனெசனல் ஸ்ரீலங்கா இன் பிரதம பயிற்றுனரும் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ரனெசனல் இன் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் சர்வதேச பணிப்பாளருமான சிகான். அன்ரோ டினேஸ் இனால் மேற்படி கழக சிரேஸ்ட மாணவர்களான கார்த்தீபன் மற்றும் கபில்ராஜ் - நிடான் டிப்ளோமா இரண்டாம் கறுப்புப்பட்டி தரத்திற்கும் சென்செய்.யூடின் சிந்துஜன் மற்றும் சென்செய்.கபில்தேவ் - யொன்டான் டிப்ளோமா நான்காம் கறுப்புப்பட்டி தரத்திற்கும் சென்செய்.டாக்டர்.குலேந்திரன் - கோடான் ஜந்தாம் கறுப்புப்பட்டி தரத்திற்கும் தேர்வு நடாத்தப்பட்டு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ்களை கழக ஆலோசகர் அகில இலங்கை சமாதான நீதிவான் லயன்.விஜயகுமார் வழங்கிவைத்தார்.