ஆயிரம் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத ரொனால்டோ ! ஈரானில் புதிய சாதனை

21 Sep, 2023 | 05:16 PM
image

போர்த்துகல் கால்பந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில், தோல்வியற்ற 1,000 ஆவது விளையாட்டை விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.

சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்துக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஈரானில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற பெர்சேபோலிஸ் கழகத்துடனான போட்டியின்போது இம்மைல்கல்லை அடைந்தார்.

சவூதியின் அல் நாசர் கழகத்துக்கும், ஈரானின் பெர்சேபோலிஸ் கழகத்துக்கும் இடையிலான ஏ.எவ்.சி சம்பியன்ஸ் லீக் போட்டி தெஹ்ரான் நகரிலுள்ள அஸாதி அரங்கில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.

இப்போட்டியில் 2-0 கோல்கள் விகிதத்தில் அல் நாசர் கழகம் வென்றது.  இப்போட்டியில் ரொனால்டோ 90 நிமிடங்கள் விளையாடினார். எனினும் அவர் கோல் எதுவும் புகுத்தவில்லை.  அல் நாசர் சார்பில் அப்துல்ரஹ்மான் காரீப், மொஹம்மத் காசிம் ஆகியோர் கோல் புகுத்தினர்.

எனினும், இப்போட்டியில் அல் நாசர் கழகம் வென்றதன் மூலம், ரொனால்டோ பங்குபற்றி தோல்வியடையாத சர்வதேச போட்டிகள் மற்றும் கழக மட்டத்திலான போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 1,000 ஆகியது.  

மேற்படி 1000 போட்டிகளில் 776 போட்டிகளில் ரொனால்டோவின் அணி வெற்றியீட்டியுள்ளது. மேலும் 224 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பையில் 'ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023'...

2023-12-07 15:46:03
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50