'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'டெவில்' எனும் திரைப்படத்திலிருந்து, 'கடவுளுக்கு கோரிக்கை..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பாடலை தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளியான வெற்றி மாறன் வெளியிட்டார். இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டெவில்'. இதில் விதார்த், பூர்ணா, டிரிகுன், சுபஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாருதி பிலிம்ஸ் மற்றும் ஹெச் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ். ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. 'கடவுளுக்கு கோரிக்கை..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மிஷ்கின் எழுத, பின்னணி பாடகி பிரியங்கா பாடியிருக்கிறார்.
இதனிடையே இயக்குநரும், நடிகருமான மிஷ்கினின் இசையமைப்பில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதாலும், ஏற்கனவே வெளியான முதல் பாடல்... பாரிய வெற்றியைப் பெற்றிருப்பதாலும், அவரது இசையில் வெளியாகும் 'கடவுளுக்கு கோரிக்கை..' எனத்தொடங்கும் பாடலும் இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM