அளவில்லா தன வரவை விரும்புபவர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் பரிகாரம்..!

21 Sep, 2023 | 01:47 PM
image

எம்மில் அனைவருக்கும் ஆயுள் முழுவதும் தடையில்லாமல் தன வரவு வரவேண்டும் என விரும்புகிறோம். குடும்ப உறுப்பினர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வருவாய் ஈட்டத் தொடங்கிய பிறகும் எமக்கான வருவாய் தடைப்படக்கூடாது என கருதுகிறோம்.

இந்நிலையில் அளவில்லா தன வரவை விரும்புபவர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் பரிகாரத்தை சோதிட நிபுணர்கள் பின்வருமாறு  முன்மொழிந்திருக்கிறார்கள். இதனை உறுதியாகவும், நம்பிக்கையுடனும் கடைப்பிடிக்க தொடங்கினால் பண வரவு உறுதி.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்- விளாம்பழம் மற்றும் தோடம் பழத்தை சாப்பிட வேண்டும். அரசமரம் மற்றும் அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் - முருங்கைக்காய் சாப்பிட வேண்டும். சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். வீதியோர குப்பை அள்ளுபவர்களுக்கு...அதாவது தூய்மை பணியாளர்களுக்கு உதவி செய்திட வேண்டும். புன்னை மரத்திற்கும் , வில்வ மரத்திற்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் - மாங்காய் சாப்பிட வேண்டும். ஆல மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். தேன் மற்றும் உலர் திராட்சை சாப்பிட வேண்டும். மருத மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் - எலுமிச்சை பழத்தை சாப்பிட வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வர வேண்டும். கல்கண்டு மற்றும் சப்போட்டா பழத்தை அதிக அளவில் சாப்பிட வேண்டும். விலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் - மாதுளம் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். அரளி செடிக்கு மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றி வளர்க்க வேண்டும். பனை உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர வேண்டும். மகிழ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் - ஒரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். வல்லாரைக் கீரை உணவை சாப்பிட வேண்டும்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் - சாத்துக்குடி, பப்பாளி பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். வில்வ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். கொய்யா பழத்தை சாப்பிட வேண்டும். கொய்யா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். ஸ்ரீ ஆஞ்சநேயரை தொடர்ச்சியாக வணங்க வேண்டும்.

பூசம்  நட்சத்திரக்காரர்கள் - தேன், கோப்பி, உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும். மருத மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். எலுமிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வர வேண்டும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் - கல்கண்டு, சப்போட்டா பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர வேண்டும். விலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். பலாப்பழத்தை சாப்பிட்டு விட வேண்டும் பலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

மகம்  நட்சத்திரக்காரர்கள் - பனை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மகிழ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். பெருமாளை வழிபட வேண்டும். சீதாப்பழத்தை சாப்பிட வேண்டும்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் - வல்லாரைக் கீரை உணவை சாப்பிட வேண்டும். தக்காளி சாதம், தக்காளி சாறு போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் - கொய்யா பழத்தை சாப்பிட வேண்டும். ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். கருப்பு திராட்சை பழத்தை சாப்பிட வேண்டும். கடம்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள்- காளான் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும். மாம்பழம் சாப்பிட வேண்டும் குபேர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் - பலாப்பழத்தை சாப்பிட வேண்டும். பலா மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட வேண்டும். அன்னாசி பழத்தை சாப்பிட வேண்டும். வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள்- சீதாப்பழத்தை சாப்பிட வேண்டும். வெள்ளை எருக்கு மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இலுப்பை மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்விசாகம்  நட்சத்திரக்காரர்கள் - தக்காளி சாறை பருக வேண்டும். வன்னி மரத்திற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். முந்திரி பருப்பு சாப்பிட வேண்டும். எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள்- கருப்பு திராட்சை பழத்தை சாப்பிட வேண்டும். கடம்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். காளான், வெள்ளரி உணவுகளை சாப்பிட வேண்டும். வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.‌

கேட்டை நட்சத்திரக்காரர்கள் - மாம்பழத்தை சாப்பிட வேண்டும். குபேர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் - அன்னாசி பழத்தை சாப்பிட வேண்டும். வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். நாவல் பழம் மற்றும் பால் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

பூராடம்  நட்சத்திரக்காரர்கள் - இலந்தை பழம் மற்றும் கொத்து மல்லி சாதம் சாப்பிட வேண்டும். இலுப்பை மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். இளநீரை சாப்பிட வேண்டும். கருங்காலி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் - முந்திரி பருப்பை சாப்பிட வேண்டும். எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். வாழைப் பழத்தை சாப்பிட வேண்டும். செங்காலி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் - நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். நெல்லி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். கரும்பு சாறை அதிகம் சாப்பிட வேண்டும். மூங்கில் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் - பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். விளாம்பழத்தை சாப்பிட வேண்டும். அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

சதயம் நட்சத்திரக்காரர்கள் - நாவல் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். பால் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். முருங்கைக்காய் சாப்பிட வேண்டும். புன்னை மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் - இளநீர் நிறைய சாப்பிட வேண்டும். கருங்காலி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மாங்காய் சாப்பிட வேண்டும். ஆல மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் - வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். செங்காலி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் - கரும்புச்சாறு பருக வேண்டும். மூங்கில் செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும். மாதுளம் பழத்தை சாப்பிட வேண்டும். அரளி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திட வேண்டும்.

27 நட்சத்திரக்காரர்களும் தங்களின் நட்சத்திரத்திற்குரிய வாழ்வியல் பரிகாரத்தை மேற்கொண்டு, தன வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நட்சத்திரம் தெரியாதவர்கள் கூட மேற்கூறிய உணவுகளில் எந்த வகையினதான உணவு உங்களுக்கு விருப்பமானதோ .... அதனை தொடர்ந்து சாப்பிடும் போது உங்களுக்கான தனவரவு அதிகரிப்பதை நீங்களே அனுபவத்தில் காணலாம்.

தகவல் :பாலசுப்ரமணியன்

தொகுப்பு : சுபயோக தாசன்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right