ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக இஸ்ரேல் தூதுவர் போர்க்கொடி - ஈரானிய பெண்களின் சுதந்திரம் குறித்து கருத்து

Published By: Rajeeban

21 Sep, 2023 | 12:27 PM
image

ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஈரான் ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பித்தவேளை இஸ்ரேல் தூதுவர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஐக்கியநாடுகள் பொதுச்சபையில்  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உரையாற்றியவேளை ஐக்கியாநாடுகளிற்கான இஸ்ரேல் தூதுவர் ஈரான் பெண்களிற்கு தற்போது சுதந்திரம் என்ற வாசகத்துடன் எழுந்து நின்று எதிர்ப்பை  வெளியிட்டுள்ளார்.

அவர் கையில் ஏந்தியிருந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டையில் மஹ்சா அமினியின் படமும் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் இஸ்ரேலிய தூதுவரை வெளியே அழைத்துச்சென்றுள்ளனர்.

இதேவேளை இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டான் தடுத்துவைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுவதை ஐநா நிராகரித்துள்ளது.

பொதுச்சபையில் ஈரான் ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் நிரந்தர வதிவிடப்பிரதிநி புகைப்படத்துடன்  இடைப்பட்ட நடைபாதையில் நடந்து வந்தார் - பாதுகாப்பு தரப்பினர் அவருடன் பேசினார்கள் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கைதுசெய்யப்படவில்லை என ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னரும் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக இஸ்ரேலிய தூதுவர் சமூக ஊடகங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

டெஹ்ரானின் கொலைகாரன் - ஈரானின் ஜனாதிபதி ரைசி தனது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததும் ஒருவருடத்திற்கு முன்னர் உரிய விதத்தில் ஹிஜாப் அணியாதமைக்காக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் படத்தை நான் காண்பித்தேன் என இஸ்ரேலியஇராஜதந்திரி  தெரிவித்துள்ளார்.

இதேவேளை நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் ஐநாவிற்கு வெளியே போராட்டத்தி;ல்ஈடுபட்டிருந்தனர் சர்வதேச சமூகத்தை  உதவி வழங்குமாறு மன்றாடினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் ஒருபோதும் உண்மைக்கான எனது போராட்டத்தை கைவிடமாட்டேன் ஐநாவின் தார்மீக சிதைவுகளை நான் எப்போதும் அம்பலப்படுத்துவேன் கொலைகாரர்களிற்கும் யூதவிரோதிகளிற்கும் செங்கம்பளம் விரிப்பவர்கள் அதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02
news-image

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல்...

2023-12-05 15:38:48
news-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு...

2023-12-05 14:46:47
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின்...

2023-12-05 12:59:21
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய கடுமையான...

2023-12-05 11:09:24
news-image

சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அள்ளிச்சென்ற வெள்ளம்

2023-12-04 17:31:57
news-image

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றது - இன்று...

2023-12-04 17:07:16
news-image

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய மெராபி எரிமலை...

2023-12-04 14:38:45
news-image

சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே...

2023-12-04 12:38:26
news-image

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் அமெரிக்க கப்பல்கள்...

2023-12-04 11:31:46