கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­மீட்பு போராட்­டமும் காணாமல் ஆக்­கப்­பட்டுள்ள­வர்­களின் உற­வினர்களின் எதிர்ப்­பார்ப்பும் கிழக்கில் நடை­பெறும் எழு­க ­தமிழ் பேர­ணியை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இப்­பே­ரணி தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கோ அல்­லது வேண்டாம் என கூறு­வ­தற்கோ எவ­ருக்கும் உரிமை கிடை­யாது என தேசிய சக­வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கனேசன் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்­தி­லேயே காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் அனைத்தும் நடை­பெற்­ற­ன. அந்­நே­ரத்தில் காணாமல் ஆக்­கப்­படும் சம்பவங்களுக்­கெ­தி­ராக நாம் போரா­டி­யி­ருக்­கா­விட்டால் இந்­நேரம் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தொகை இரட்­டிப்­பா­கி­யி­ருக்­க­க்கூடும் எனவும் அவர் தெரி­வித்தார்.

கிழக்கில் நடை­பெறும் எழுக தமிழ் போராட்டம் தொடர்­பிலும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் அளித்த முறைப்­பாடு குறித்தும் அமைச்­ச­ரி­டம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்கில் தொடர்ந்தும் காணி ஆக்­கி­ர­மிப்­புக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. தற்­போது யுத்தம் முடிந்து பல வரு­டங்கள் ஆகின்­றன. ஆனாலும் தொடர்ந்து அதி பாது­காப்பு வலயங்கள் என்ற பெயரில் நில ஆக்­கி­ர­மிப்­புக்கள் இடம்­பெ­று­வது வருத்­த­ம­ளிக்­கின்­றது. யுத்தம் இடம்பெற்ற காலப்­ப­கு­தியில் குறித்த நிலங்கள் பாது­காப்பு தேவைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால் தற்­போது அவ்­வா­றான தேவை எதுவும் அங்கு காணப்­ப­ட­வில்லை. தற்­போது அதி­பா­து­காப்பு வல­யங்­களும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­க­ளையும் விடு­விக்க வேண்­டிய காலம் உத­ய­மா­கி­யுள்­ளது.

வடக்கில் இரா­ணு­வத்தை குறைப்­பது வேறு வகை­யாக நோக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். அதேபோல் மக்­களின் காணி­களை விடு­விப்­பது என்­பது  வேறு விட­ய­மாகும். பாது­காப்­புக்­காக மக்­களின் காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் கேப்­பா­ப்புலவு மக்­களின் காணி மீட்ட போராட்­டத்­துக்கும் நிச்­சயம் தீர்வு கிடைக்கும்.

கடந்த அர­சாங்­கத்­தி­லேயே அதி­க­ள­வி­லானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டனர். நாம் அந்­நே­ரத்தில் அர­சாங்­கத்­துக்­கெ­தி­ராக கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­தி­ருந்தோம். அந்­நே­ரத்தில் நாம் காணாமல் ஆக்­கப்­ப­டும் சம்பவங்களுக்கெதிராக போரா­டி­யி­ருக்­கா­விட்டால் தற்­போது குறித்த தொகை இரட்­டிப்பா­கி­யி­ருக்­க­கூடும் என்­பதை காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள் புரிந்­துக்­கொள்ள வேண்டும்.

குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு தற்­போது நாம் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்றோம். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவை அமைக்க அமைச்­ச­ரவை பத்­திரம் மீள்­தி­ருத்­தத்­துடன் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 இது வெகு­வி­ரைவில் நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரப்­படும். எனவே  வடக்கில் தற்­போது பூதா­க­ர­மாக்­கி­யுள்ள கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­மீட்பு போராட்­டமும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் எதிர்ப்­பார்ப்பும் கிழக்கில் நடை­பெறும் எழு­க­ தமிழ் பேர­ணியை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

வடக்குஇ கிழக்கு மக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே அந்த பேரணியை மேற்கொள்கின்றனர். அவர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். எழுக தமிழ் போராட்டம் வடக்குஇ கிழக்கு மக்களின் உரிமைக்குரலாக மாற்றமடைந்துள்ளது. எனவே இப்பேரணி தொடர்பில் விமர்சிப்பதற்கோ அல்லது வேண்டாம் என கூறுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.