அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் தனுஸ்ககுணதிலகவிற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று முடிவிற்கு வந்துள்ள அதேவேளை தனது தீர்ப்பை அடுத்த வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளதாக நீதிபதி சரா ஹியுகெட் தெரிவித்துள்ளார்.
இன்றைய நான்காம் நாள் வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்ட பெண் எதிர்பார்த்ததை விட தனுஸ்கவுடனான பாலியல் உறவு வித்தியாசமாக அமைந்தது என அரசசட்டத்தரணி கப்பிரியலீ ஸ்டீட்மென்தெரிவித்துள்ளார்.
அது மிகவும் மூர்க்கத்தனமானதாக காணப்பட்டது குற்றம்சாட்டப்பட்டவர் அந்த பெண்ணின் வேண்டுகோள்களை மதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குற்றம்சாட்டியுள்ள பெண்ணை பிரிஸ்பேர்னிற்கு வருமாறு தனுஸ்ககுணதிலக அழைத்தார் தான் அதற்கான செலவை பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்தார் அதனை அந்த பெண் நிராகரித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ள அரசவழக்கறிஞர் இருவருக்கும் இடையிலான உறவு பரஸ்பர சம்மதத்துடன் இடம்பெற்றது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பிற்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை இடைவிடாது முயற்சிசெய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
படுக்கைஅறையில் தனக்கு ஆணுறை பயன்படுத்துவது பிடிக்காது என தெரிவித்த தனுஸ்க அது தொடர்பில் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் எனவும் அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணை திருப்திப்படுத்துவதற்காக அவர்ஆணுறையை அணிய இணங்கினார் அதனை அகற்றுவதற்கு அவருக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன எனவும் அரசதரப்பு சட்டத்தரணிதெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM