(துரைநாயகம் சஞ்சீவன்)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் வியாழக்கிழமை (21) காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
இதன்போது 74 வருட தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய், வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம்களின் இன, மத அடையாளங்களை அழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் இறுதியில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறையை உறுதிப்படுத்துமாறு கோரிய ஜனநாயக மக்கள் போராட்டம் இன்று 21ம் திகதி வியாழக்கிழமை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான இப்போராட்டமானது திருகோணமலையிலும் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM