(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கு மாகாணத்தில் வனவள திணைக்களத்தின் கீழுள்ள விவசாய நிலங்கள் மற்றும் காணி உரித்துள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற காடு பேணற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கோரிக்கையொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றியதாவது,
வடக்கு மாகாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செயற்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளன. அந்த வகையில் விவசாய நிலங்கள், வீட்டு நிலங்கள் மற்றும் மக்களின் உறுதி காணிகள், அழிக்கப்பட்ட குளங்களைக் கூட மீள செப்பனிட முடியாத நிலைமையே உள்ளது.
எமது பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை செயற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தினாலே பிரச்சினைகள் பல தீர்ந்துவிடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான விவசாய காணிகள் வனப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வனப்பகுதிகளை அடையாளப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளுக்கு அமைய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மக்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்கப்படுவதுடன், வன வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி காணி தொடர்பான பிரச்சினைகளை இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதனால் இந்த விடயம் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை. அனைத்து காணிகளையும் நாங்கள் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம். அதன்படி காணிகளுக்கான உரித்துகள் வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM