2019, 20 கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் அடுத்த மாதத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர் - அமைச்சர் சுசில் 

20 Sep, 2023 | 09:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை ஒக்டோபர் மாதத்தில் இணைத்துகொள்ள இருக்கிறோம். 

அதேபோன்று 2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஓர் இரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20)வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ரோஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ரோஹினி குமாரி கவிரத்ன மேலும் தெரிவிக்கையில், 

2019, 20ஆம் ஆண்டுக்காக கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக இதுவரை மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. 

அவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில்  பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று 2021ஆம் ஆண்டுக்கு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. 4 வருடங்களாக மாணவர்கள் பரீட்சை எழுதிவிட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் கல்வியியல் கல்லூரிகளில் தற்போது ஒரே ஒரு ஆண்டு மாணவர்களே பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்த வருடம் பயிற்சி பெற்று வெளியேற ஆசிரியர்கள் இல்லை. மீண்டும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வெளியேற இருப்பது 2025 ஆகும். அதனால் 2019, 20, 21ஆம் ஆண்டு மாணவர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு விரைவாக இணைத்துக்கொள்ள முடியாமல் போனால் மீண்டும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 2029ஆம் ஆண்டிலேயே வெளியேறுவார்கள். அதனால் இது தொடர்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறோம் என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

2019, 20ஆம் ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவாகி இருக்கும் 1400 மாணவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களை 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு பிரிக்கப்பட்டிருக்கிறோம். 2ஆம் ஆண்டு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு முடிவடைந்து தற்போது மேற்பார்வை இடம்பெற்று வருகிறது. 

இந்த நடவடிக்கை முடிவடைந்ததுடன் அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த மாணவர்கள் அனைவரையும் 19 பீடங்களுக்கும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன் 2021 குழுவை கல்வியியல் கல்லூரிகளில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு இன்னும் ஓரிரு  வாரங்களில் வெளியிடப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20
news-image

இலங்கை மிகப்பெரும் அரசியல் சர்வதேச அரசியல்...

2024-02-23 17:45:30