எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான எளிய பரிகாரம்..!

20 Sep, 2023 | 04:41 PM
image

அரசு ஊழியராக இருந்தாலும் சரி.. அல்லது தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களாக இருந்தாலும் சரி.. தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி அல்லது நாளாந்த தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களாக இருந்தாலும் சரி.. காலையில் தொடங்கி மாலை வரை பணியாற்றி விட்டு இரவு நேரத்தில் தங்கி இளைப்பாறுவதற்கு குடும்பம் என்ற அமைப்பில் சங்கமித்து விடுகிறோம்.

இந்த குடும்பம் என்ற அமைப்பு அதாவது குடும்பம் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி நிம்மதி ஆகியவை இருந்தால் மட்டுமே உங்களால் உத்வேகத்துடன் செயல்பட இயலும்.

இந்த குடும்பம் என்ற அமைப்பு ஒருவருக்கு சிதைந்து விட்டால் அவரிடம் பணமிருந்தாலும் மன நிம்மதி என்பது இருக்காது. இந்தத் தருணத்தில் எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்பினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் பரிகாரமாக முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதனை, அவருடைய ஜாதகத்தின் இரண்டாம் பாவத்தை வைத்து தான் கணக்கிட வேண்டும்.

ஏனெனில் உங்களுடைய ஜாதக கட்டத்தில் உங்களின் இந்த பிறவியின் கர்ம பதிவுகள் மட்டுமல்லாமல் உங்களுடைய முன்னோர்களின் கர்ம பதிவுகளும் இடம் பிடித்திருக்கும். உங்களுடைய கர்ம பதிவுகளை முறையாகவும் ஆழமாகவும் விரிவாகவும் தேர்வு செய்ய வேண்டும் இதற்கு கற்றுத் தேர்ந்த ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டல் அவசியம்.

செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், புத்திர பிரதோஷம் ... என ஏராளமான தோஷங்கள் இந்த பிறவியிலும் தொடர்வதற்கு... கடந்த பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் தான் காரணம். அதனை ஒட்டித்தான் இந்த பிறவியில் உங்களுடைய ஜாதக கட்டம் அமைந்திருக்கிறது என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பரிகாரம் என்பது வேறு. வழிபாடு என்பது வேறு. பரிகாரம் என்பது உங்களுடைய ஜாதக கட்டத்தில் உங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய கிரகங்கள் வலிமையிழந்திருந்தால்... அதனை வலிமைப்படுத்துவதற்காக ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைப்பது தான் பரிகாரம்.

இதற்கு அவரவர்களின் பொருளாதார வசதிக்கேற்ப கட்டணங்கள் உண்டு. அந்த கட்டணத்திற்கு ஏற்ப பரிகாரத்தை மேற்கொண்டால்தான் அவை பலனளிக்க தொடங்கும்.

வழிபாடு என்பது பரிகாரம் செய்வதற்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி இருப்பவர்களுக்கு... எந்த கிரகத்தின் வலிமை குறைவாக இருக்கிறதோ.. அந்த கிரகத்தின் அதிபதியான இறைவனின் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் அதாவது ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று, மனதார மனம் உருகி, ஒருமுகமான மனதுடன் பாவங்களை நீக்கி நல்லருள் தர வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.

அதற்கு முன் ஒருவருடைய லக்னத்திலிருந்து இரண்டாம் இடம் தான் குடும்ப ஸ்தானம். இந்த இரண்டாம் இடத்தின் அதிபதி.. லக்னத்திலிருந்து ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் மறைந்திருக்கக் கூடாது. மறையக் கூடாது.

ஆறாம் மற்றும் எட்டாம் இடத்தின் நட்சத்திரத்தின் சாரத்திலும் இரண்டாமிட அதிபதி இடம் பெறக்கூடாது.

உங்களுடைய லக்னத்தின் இரண்டாமிட அதிபதி- செவ்வாய், சனி, கேது கிரகத்துடன் இணைவு  பெற்றிருக்கக் கூடாது. இணைந்திருந்தால் குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை விடயங்களில் பாரிய பாதிப்பு ஏற்படும்.

ஜோதிடர்கள் வலியுறுத்தும் பரிகாரத்திற்கு கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள் கீழ்கண்ட எளிய பரிகாரத்தை பின்பற்றலாம்.

வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். இதனை 12 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.‌ நீங்கள் மட்டுமல்ல உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய குடும்பத்தில் நிலவி வந்த வேற்றுமை, பற்றாக்குறை, அமைதியின்மை ஆகியவை நீங்கி செல்வ வளமும், மன மகிழ்ச்சியும் மன நிம்மதியும் ஏற்படும்.

சிலர் இதனை செய்ய மறுப்பர் அல்லது வேறு சில காரணங்களால் இதனை 12 வாரங்கள் தொடர்ந்து செய்ய இயலாது என்பர் அவர்களுக்கான வாழ்வியல் பரிகாரத்தை ஆன்மீக நிபுணர்கள் பின்வருமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.

உங்கள் வீட்டு அருகில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் கணவன்- மனைவியோ அல்லது தந்தை -மகனோ அல்லது தாய் -மகளோ கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்தால்... அவர்களை பேசி, சமாதானப்படுத்தி.. ஒன்றிணைக்க வேண்டும். இதுபோன்ற ஒற்றுமை முயற்சியை நீங்கள் மேற்கொண்டால் உங்களின் பாவச் சுமை குறைந்து குடும்ப மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் இதற்கு மாறாக தந்திரமாகவோ அல்லது சூழ்ச்சியாகவோ அல்லது பண பலன் கருதியோ நீங்கள் சுயநலமாக செயல்பட்டால் உங்களின் பாவம் அதிகரிக்கும்.

எனவே நீங்களும், உங்களது குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என விரும்பினால்.. உங்களுடைய லக்னத்தில் இரண்டாம் இடத்தில் அதிபதிக்குரிய பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் லட்சுமி நரசிம்மரை வழிபட தொடங்குங்கள். இதன் மூலம் நீங்கள் உங்களுடைய குடும்பமும், குடும்ப உறுப்பினர்களின் சந்தோஷமும் பெருகுவதை காணலாம்.

தகவல் :சுந்தரபாண்டியன்

தொகுப்பு :சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஜமானர் இறந்தது தெரியாமல் 4 மாதமாக...

2023-11-06 15:00:01
news-image

வெளியரங்கமாகின்றது - TikTok இன் வெற்றி...

2023-11-01 16:34:53
news-image

750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து...

2023-10-25 10:05:28
news-image

சக்தி வாய்ந்த பார்வை!

2023-10-19 17:26:17
news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38