சமுத்திரகனி நடிக்கும் 'திரு. மாணிக்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

20 Sep, 2023 | 04:40 PM
image

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'திரு. மாணிக்கம்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

கதையாசிரியரும், இயக்குநருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'திரு. மாணிக்கம்'. இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

பாரதிராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.மேலும் இவர்களுடன் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். எளிய மனிதர்களின் யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஜி பி ஆர் கே சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும், எளிய மனிதர்களின் வாழ்விய அறம் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சமுத்திரக்கனி எளிய மனிதரைப் போல் வேஷ்டி சட்டை அணிந்து, கையில் ஒரு தோள் பையை சுமந்து கொண்டு, கனவுகளுடன் அண்ணாந்து பார்க்கும் தோற்றம்... ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right