மன்னார் கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மன்னாரில் 13 நீர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்கள் டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது :
மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மீன் பிடிப்பதற்காக 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் மீன்பிடித் தேவைகளுக்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்த திட்டமிட்ட 05 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடிக்க வெடி மருந்துகளை பயன்படுத்துவது கடல்வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்தோடு, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், பிற சட்ட விரோத மீன்பிடி நடைமுறைகளை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டன.
கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீன்பிடிக்க வணிக ரீதியிலான வெடிமருந்துகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 41 வயதுக்குட்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள், 13 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM