பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை

20 Sep, 2023 | 02:01 PM
image

படித்த இளம் பெண்கள் மற்றும் பெண்மணிகள் திருமணத்திற்குப் பிறகு குழந்தை வளர்ப்பில் ஈடுபடும்போது வீட்டில் உள்ள பெரியவர்களின் அல்லது அனுபவஸ்தர்களின் அறிவுரையை சிறிதும் காது கொடுத்து கேட்பதில்லை.

இதற்கு மாறாக மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் அறிவுரையை தான் முழுமையாக பின்பற்றுகிறார்கள். தற்போதைய சூழல் இப்படி இருக்க... பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கும் போது.. பெரும்பாலான தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சளி தொல்லை இருக்கிறதோ..? என்ற சந்தேகத்துடன் மருத்துவர்களை நாடுகிறார்கள்.‌

அவர்களுக்கு மருத்துவர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதம் வரை அவர்களுக்கு மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டால், வாய் வழியாகத்தான் மூச்சு விடுவார்கள்.

இது இயல்பானது தான். இதன் போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மூக்கடைப்பிற்கு தான் சிகிச்சை பெற வேண்டுமே தவிர.., அக்குழந்தைகளுக்கு சளி தொல்லை இல்லை என்பதனை உணர வேண்டும்.

குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி இருந்தால்..., அந்தப் பிள்ளைகள் தாய்ப்பாலை அருந்துவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்த அறிகுறியை பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானித்து, அவர்களை மருத்துவர்களிடம் காண்பித்து சளி தொல்லையை நீக்குவதற்கான சிகிச்சையை பெறலாம்.‌

மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும் தருணங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டிராப்ஸ் எனப்படும் சொட்டு மருந்தினை அவர்களுடைய மூக்கில் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு விட வேண்டும். மூக்கின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு சொட்டு விட வேண்டும். சொட்டு மருந்து பிரத்யேக கலவையுடன் கூடிய சாதாரண உப்பு கரைசல்தான் என்பதையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நான்கு அல்லது ஐந்து தினங்களுக்குள் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மூக்கடைப்பு, சொட்டு மருந்து சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் தனசேகர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right