மன்சூர் அலிகான் நடிக்கும் 'சரக்கு' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

20 Sep, 2023 | 04:15 PM
image

நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சரக்கு' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் வெளியிட்டார்.

இயக்குநர் ஜெ. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சரக்கு'. இதில் மன்சூர் அலிகான், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சரவண சுப்பையா, பாரதி கண்ணன், 'ஆடுகளம்' நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, வலினா, நிகிதா, கூல் சுரேஷ், பபிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் மற்றும் டி. மகேஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

மதுவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராஜ் கென்னடி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் கே ராஜன், நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவி மரியா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர். 

இவ்விழாவில் நகைச்சுவை நடிகர் கோதண்டம் பேசுகையில், '' தமிழக அரசு மதுவை விற்பனை செய்து அதன் வருமானத்தை நம்பி இருப்பதை விட, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பிற துறைகளில் கவனம் செலுத்தி அதில் தனியாருக்கு செல்லும் லாபத்தை அரசே மேற்கொண்டால்..

அரசுக்கு வருவாய் கிடைக்கும். அரசு அதிகாரிகள் நினைத்தால் அரசுக்கு வருமானம் வரும் துறைகளை பட்டியலிடுவார்கள். இதனால் மது விற்பனையை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழர்களை புத்திசாலியாகவும், சாமர்த்தியசாலியாகவும் கடும் உழைப்பாளியாகவும் மாற்றுவதற்கு முன் வர வேண்டும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right