கனடாவின் பிரிட்டிஸ்கொலம்பியாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் இந்திய புலனாய்வாளர்கள் உள்ளனரா என கனடாவுடன் இணைந்து அமெரிக்காவும் விசாரணைகளை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் மாதம் பிரிட்டிஸ்கொலம்பியாவில் ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய முகவர்கள் உள்ளனர் என கிடைத்துள்ள நம்பதகுந்த தகவல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அமெரிக்காவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என கனடாவை சேர்ந்த சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிடம் உள்ள ஆதாரங்களை விரைவில் பகிரவுள்ளோம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளையும் பாதித்துள்ளது.
ஒக்டோபரில் கனடாவின் வர்த்தக குழுவினர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM