ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய பிக்கு ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமானேர் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடமிருந்து மூன்று கணினிகள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடக குழுக்களில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கணினி குற்ற புலனாய்வு பிரிவின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM