தியாகி திலீபனின் 36வது நினைவு தினத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) திருகோணமலையில் நினைவு கூரப்பட்டது.
திருகோணமலை சிவன் கோவிலடியில் தியாகி திலீபனின் 36வது நினைவு தினத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19) மதியம் நினைவுகூரப்பட்டது. குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று அதனை மறுத்து மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலானது சமூகங்களுக்கு இடையில் இன விரிசலை ஏற்படுத்த இந்த அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும் அரச இராணுவ ஒத்துழைப்புடன் புலனாய்வுத் துறையினராலே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே இதனை தாம் பார்ப்பதாகவும் தமிழ், முஸ்லிம்களது உரிமைக்காகவே தியாகி திலிபன் அகிம்சை முறையில் போராடியதாகவும் அது பிற்போக்கில் அரசினால் பிரிவினைவாதமாக மாற்றப்பட்ட நிலையில் தற்போதும் இந்த அரசானது குறித்த பிரிவினைவாத அடக்குமுறைக்கு ஏற்றவாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM