திலீபன் வழியில் வருகின்றோம் - ஊர்தி பவனி புதுக்குடியிருப்பை சென்றடைந்தது

Published By: Vishnu

19 Sep, 2023 | 09:02 PM
image

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் "திலீபன் வழியில் வருகின்றோம்" என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (19) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்திருந்தது. 

திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது புதுக்குடியிருப்பு சந்தியினை வந்தடைந்தது. பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு இன்றைய ஊர்திப் பவனியானது முல்லைத்தீவு நகர்பகுதியை நோக்கி நகர்கின்றது.

இந்நிலையில் பொத்துவில் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இந்நினைவு ஊர்தியானது இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியை சென்றடையவுள்ளது.

செவ்வாய்க்கிழமை (19) புதுக்குடியிருப்பை வந்தடைந்த ஐந்தாம் நாள் பேரணியானது முள்ளிவாய்க்கால், கொக்குளாய்,  கொக்குதொடுவாய் பகுதிகளின் ஊடாக நெடுங்கேணியை சென்றடைய இருக்கின்றது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41