(எம்.வை.எம்.சியாம்)
சீதுவ, தண்டுகம் ஓயாப்பகுதியில் பயணப்பை ஒன்றுக்குள் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தின் தண்டுகம் ஓயாவின் கரையோரப்பகுதியில் பயணப்பொதி ஒன்றுக்குள் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தின் போது 36 வயதுடைய குடுவெவ, மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஒருவரே உயிரிழந்திருத்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் மூத்த மகனுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவத்தின் அடிப்படையில் குறித்த நபர் தாக்கிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனவும் மாதம்பை, கட்டான, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களில் குறித்த நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் பிரதான சந்தேகநபரின் நண்பர் என்பதுடன் கடந்த 11ம் திகதி கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் மேற்படி நபரை சந்தேகநபர்கள் சந்தித்ததாகவும், அதன் பின்னர் அவரை தமது காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்வாதகக்கூறி புறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான, தகோன்னா பகுதியிலுள்ள சந்தேக நபர்களுக்கு சொந்தமான தென்னைத் தோப்புக்குள் அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட பணத்தை மீள பெற்றுத் தருமாறு கோரி கைகளாலும், தடியாலும் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை பயணப்பை ஒன்றுக்குள் இட்டு சீதுவ பகுதியில் விட்டுச்னெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM