சஹ்ரானை மிகுந்த திறமைசாலியான ஒருவர் இயக்கினார் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் குறித்து சந்தேகங்கள் உள்ளன - சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

Published By: Rajeeban

19 Sep, 2023 | 05:08 PM
image

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனிரட்ண  தெரிவித்துள்ளார்.

டிஎன்எல் தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை இரவு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தலைமை வகித்த ஜஹ்ரான் ஹாசிமை  கட்டுப்படுத்திய மற்றுமொரு நபர் காணப்பட்டார்இஅந்த நபர் மிகவும் புத்திசாலி - இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது-விடுதலைப்புலிகள் கூட அதனை செய்யவில்லை என செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர் அவருக்கு அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு மேல் யாரோ இருந்தார்கள் - மிகவும் திறமையும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஒருவர் அவரிடம்ஒருங்கிணைந்த தாக்குதலிற்கு பலரை ஒருங்கிணைக்கும் திறன் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் இராணுவபுலனாய்வு பிரிவினர்களிற்கு ஜஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது அவர்கள் அவருடன்இணைந்தும் செயற்பட்டுள்ளனர்-தாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் சிஐடியின் முன்னாள் தலைமை அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள்  இயக்க உறுப்பினர்களே காரணம் என்ற கருத்தினை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர்- அவர்கள் சில ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள் இது குறித்து சிஐடிக்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் பண்டார முன்னெடுத்தார்-எனினும் இந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன-ஐஎஸ் அமைப்பிடமிருந்து ஜஹ்ரானிற்கு உதவிகள் கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தேசிய புலனாய்வு பிரிவின் தற்போதைய தலைவர் சுரேஸ் சாலேக்கும்சிஐடியினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை.சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

economy next

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தை பகுதியில் ரயில் விபத்து ;...

2024-09-11 02:15:39
news-image

வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு...

2024-09-11 02:03:48
news-image

யாழில் உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக...

2024-09-11 00:07:11
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும்...

2024-09-10 23:12:17
news-image

இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில்...

2024-09-10 19:46:59
news-image

தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட...

2024-09-10 20:57:49
news-image

முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற...

2024-09-10 19:43:45
news-image

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

2024-09-10 19:46:29
news-image

3 வயது சிறுமி மீது பாலியல்...

2024-09-10 19:39:00
news-image

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை...

2024-09-10 19:37:55
news-image

அதிரடியாக 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி...

2024-09-10 19:18:17
news-image

சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து...

2024-09-10 19:03:50