அடையாள அட்டை இல்லாமல் பெருந்தோட்டங்களில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் - வே. இராதாகிருஷ்ணன்

19 Sep, 2023 | 05:44 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அடையாள அட்டை இல்லாமல் பெருந்தோட்டங்களில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதனால் அந்த  மக்களுக்கு அடையாள அட்டையை இலகுவில் பெற்றுக்கொள்ள அந்த பகுதியில் விசேட நடமாடும் சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட பகுதிகளில் அதிகமானவர்களுக்கு அடையாள அட்டை இல்லாமையால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஈ.பி.எப். ஈ.டி.எப், பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளின் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதனால் பெருந்தோட்ட மக்களுக்கு அடையாள அட்டையை இலகுவில் பெற்றுக்கொள்ள அந்த பகுதியில் விசேட நடமாடும் சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் இந்த வருடத்துக்குள் பல சட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதேபோன்று பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். தற்போது ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் பல கட்டண அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை காண்கிறோம்.

மக்கள் பல்வேறு கஷ்டத்தில் இருக்கும்போது தொடர்ந்தும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சட்டங்களை மேற்கொள்ளக்கூடாது.

என்றாலும் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை தற்போது இலகுபடுத்தி இருப்பதை வரவேற்கிறோம். அதேபோன்று கடவுசீட்டு விநியோகமும் இன்னும் இலகுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் நாட்டில் தற்போது கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. அதனால் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று செல்வராசா கஜேந்திரன் எம்.பி. மீதான தாக்குதல் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை இல்லாமலாக்கி அடுத்த தேர்தலுக்கான வாக்கை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகவே இருக்க வேண்டும். எனவே இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தாமல் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47