தலாத்துஓயா குருதெனிய வீதியிலுள்ள கடையொன்றில் பியர் அருந்திக்கொண்டிருந்த இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களாலும் தாக்கப்பட்ட இருவரும் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குருதெனிய வீதியிலுள்ள கடை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (18) இருவர் பியர் அருந்திக் கொண்டிருந்தனர். இதன்போது தலாத்துஓயா பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அந்த இடத்துக்குச் சென்று குறித்த இடத்தில் பியர் குடிக்கக் கூடாது என இருவரையும் எச்சரித்துள்ளனர்.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்டும் தடி மற்றும் மண்வெட்டியால் இருவரையும் தாக்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM