படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு பின்னர் சுமார் 30 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வந்த நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 58.
1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் ‘என் உயிர் தோழன்'. அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாபு. அப்படத்திற்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதையும், தனியாக வசனமும் எழுதியவர்.
ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டனது வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று சொன்ன படம். சரியாக கவனிக்கப்படாமல் போன படங்களில் ஒன்று. அறிமுக நடிகரான பாபுவின் நடிப்பு அப்போது பலராலும் பாராட்டப்பட்டது.
அப்படத்திற்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரமன் இயக்கிய ‘பெரும்புள்ளி' படத்திலும், அந்தக் கால இயக்குனர் பீம்சிங் மகன் கோபி பீம்சிங் இயக்கிய ‘தாயம்மா' என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அடுத்து, 'பொண்ணுக்கு சேதி வந்தாச்சு' என்ற படத்திலும் நடித்தார்.
இதையடுத்து, ‘மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் நடித்தபோது, உயரத்திலிருந்து கீழே குதிக்க வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று படக்குழுவினர் எவ்வளவோ சொல்லியும், காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரே மேலிருந்து குதித்தார்.
ஆனால், தவறுதலாக தள்ளி விழுந்ததில் அவருடைய முதுகெலும்பில் பலத்த அடிபட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அது அவருக்கு நிரந்தர படுக்கையானது. சிறிது காலம் நடந்தாலும் மீண்டும் படுத்த படுக்கையானார். சுமார் 30 ஆண்டு காலமாக படுத்த படுக்கையாகவே இருந்த நடிகர் பாபு, திங்கட்கிழமை (18) இரவு உயிரிழந்தார்.
சேலத்தில் பிறந்த பாபு, மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் க.இராஜாராம் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM