தீயினால் எரிந்து நாசமான வீட்டிற்கு பதிலாக சனுகி விஹங்கா சிறுமிக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 3

19 Sep, 2023 | 03:40 PM
image

தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் தீயினால் எரிந்து நாசமான சனுகி விஹங்கா என்ற சிறுமிக்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியிலிருந்து ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கேகாலை மாவட்ட முகாமையாளரிடம் அறிக்கை பெற்றுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி கூறுகிறார். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சிறுமிக்கு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தெரணியகல, உடமாலிபொட பிரதேசத்தில் வசிக்கும் சனுகி விஹங்கா சிறுமியினுடைய வீடு கடந்த 14 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீயினால் முற்றாக எரிந்து நாசமானது. இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டதையடுத்து, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சனுகியின் தந்தைக்கு நிரந்தர வேலை இல்லை. அவர்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.

வீடு தீயில் எரிந்து நாசமானதால், தற்போது மெழுகு துணியால் மூடப்பட்ட தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றனர். அதனால் புதிய வீடு கட்டுவது அவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாகிவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41