உங்களுடைய தொழிலின் மாய தடை நீங்கி, அதீத லாபம் பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்...!

19 Sep, 2023 | 05:21 PM
image

இன்றைய திகதியில் எம்மில் சிலர் அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதை விட, சுய தொழிலில் ஈடுபடுவது தான் சிறந்தது என கருதி தங்களுக்கு தெரிந்த தொழிலை மேற்கொள்வர்.

அந்த தொழிலையும் குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவைகளை செய்து வருவர்.

ஆனால் சில மாதங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த தொழில்... திடீரென்று தடைப்பட்டு, வருவாய் குறைந்து, வாடிக்கையாளர்களும் குறைந்து, நஷ்டத்தில் இயங்கத் தொடங்கும். இதன்போது பலரும் தங்களையே நொந்து கொள்வர்.

இதன் காரணமாக உற்சாகமின்றி... கடமைக்காக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து வாடிக்கையாளர்கள் யாரேனும் வரமாட்டார்களா..! என ஆதங்கத்துடன் வீதியையே உற்றுக் கண்காணித்துக் கொண்டிருப்பர். இவர்கள் தங்களது தொழிலில் ஏற்பட்ட மாய தடையை அகற்றி, நல்ல லாபத்தை பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

பட்டை தூள், நாட்டு சர்க்கரை, செங்கல் தூள் மற்றும் வினிகர் ஆகிய பொருட்களை நாம் முதலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டை தூள், நாட்டு சர்க்கரை, செங்கல் தூள் ஆகிய மூன்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனை வினிகரில் கலந்து விட வேண்டும்.

தற்போது இந்த கலவையைக் கொண்டு எம்முடைய விற்பனை நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், தரைப்பகுதியிலும், பணப்புழக்கம் கொண்டிருக்கும் மேஜையிலும் சுத்தப்படுத்த வேண்டும். வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இதனை முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செய்து வரும் போது... எம்முடைய விற்பனை நிலையத்திற்குள் மாயமாக நுழைந்த எதிர் நிலை ஆற்றல் மறைந்து.., நேர் நிலையான ஆற்றல் அலையாக உருவாகும். இது அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரை உற்சாகப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் வரவையும் அதிகரிக்கும். அவர்கள் விரும்பும் பொருளின் இருப்பும் அதிகரித்து, அதனூடாக தொழிலும், லாபமும் வளர்ச்சி அடையும்.

உடனே எம்மில் சிலர் பட்டை, நாட்டு சர்க்கரை, வினிகர்... இதெல்லாம் சரி.. ஏன் செங்கல் தூள்? என வினா எழுப்புவர். செங்கல் என்பது செவ்வாய் பகவானின் காரகத்துவத்தின் குறியீடு. வாடிக்கையாளர்களின் வருகை குறைவதால் விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு மனதளவில் சோம்பல்தனமும், விரக்தியும் ஏற்பட்டிருக்கும். அதனை விரட்டி அடிப்பதற்காகத்தான் செங்கல் தூளை பயன்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்கள்.

மேலும் சிலருக்கு குறிப்பாக பட்டை, நாட்டு சர்க்கரை ஏன்? என கேள்வி எழும். இவ்விரண்டும் சுக்கிர பகவானின் காரகத்துவத்தின் பொருட்கள். சுக்கிர பகவான் நாளாந்தம் பண வரவை ஏற்படுத்தித் தருவதில் வல்லவர் என்பதால், அவருடைய காரகத்துவம் மிக்க பொருட்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வேறு சிலர் ஏன் வினிகர்? என கேள்வி எழுப்பக்கூடும். வினிகர் எம்முடைய விற்பனை நிலையத்தில் அழையா விருந்தாளியாக உட்புகுந்த எதிர் நிலை ஆற்றலை விரட்டியடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நான்கு பொருட்களையும் பயன்படுத்தி, உங்களது விற்பனை நிலையம் அல்லது அலுவலகத்தை சுத்தப்படுத்தினால் சுக்கிர பகவான் மற்றும் செவ்வாய் பகவானின் அருள் கிடைக்க பெற்று, மீண்டும் பழைய நிலையில் உற்சாகத்துடன் இயங்கி, வாடிக்கையாளர்களை மகிழ்வித்து, உங்களது லாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.‌

தகவல் : பாக்கியா

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காரிய வெற்றியை அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த...

2024-07-13 16:04:21
news-image

சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய...

2024-07-11 17:36:37
news-image

சந்திராஷ்டமத்தைக் கண்டு பயம் கொள்ளலாமா...?!

2024-07-10 17:50:31
news-image

அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான்...

2024-07-09 17:55:38
news-image

கண்களின் கர்மாவை அகற்றும் எளிய பரிகாரம்..!?

2024-07-06 18:20:54
news-image

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி...

2024-07-05 17:09:04
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

2024-07-04 16:37:48
news-image

செல்வ வளத்தை அள்ளி வழங்கும் கோதூளி...

2024-07-03 16:50:28
news-image

அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான...

2024-07-02 23:38:29
news-image

உங்களின் செல்வ நிலையை உயர்த்தும் ஆருடா...

2024-07-01 19:31:15
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய...

2024-06-29 16:35:07
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மாத்ரு தோஷம்..!

2024-06-28 17:55:45