இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை அழுத்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

19 Sep, 2023 | 05:09 PM
image

எம்முடைய உடலில் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்பை நாம் உணர்வது போல்... எம்முடைய மூளையிலும் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் இன்ட்ராகிரானியல் ஹைப்பர் டென்ஷன் என்றும், இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.‌ இதற்கு தற்போது நவீன மருந்தியல் சிகிச்சைகளும், சத்திர சிகிச்சைகளும் அறிமுகமாகி நிவாரணமளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்முடைய மூளையில் செரிப்ரோஸ்பைனல் ஃப்ளூய்ட்ஸ் எனப்படும் திரவம் சுரக்கிறது. இந்த திரவம்- மூளைக்குள் ஏற்படும் அழுத்தத்தை சமநிலையில் சீராக பராமரிப்பதற்கு பயன்படுகிறது. இந்நிலையில் எம்முடைய உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூளையிலும் எதிரொலித்து.., அங்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதனுடன் இந்த மூளையை பாதுகாக்கும் திரவத்திலும் அழுத்தம் அதிகரிக்கும்.

நாளாந்தம் எம்முடைய மூளையில் 500 மி.லீ அளவிற்கு இந்த செரிப்ரோஸ்பைனல் ஃப்ளூய்ட்ஸ் சுரக்கிறது. இந்த திரவம் ஒரு முறை 150 லிருந்து 200 மி.லீ வரை சுரக்கிறது. ஏழரை மணி தியாலத்திற்கு பிறகு இது மீண்டும் இதே அளவு சுரக்கிறது. அந்த வகையில் நாளாந்தம் இந்த திரவம் ஏறத்தாழ 500 மி. லீ அளவில் இயல்பாக சுரக்கிறது.

இந்த திரவம் இயல்பான அளவைவிட கூடுதலாக சுரந்தாலோ அல்லது இது பயணப்படும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ அல்லது இதனை உட்கிரகிக்கும் தருணத்தில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ எம்முடைய மூளையில் அழுத்தம் ஏற்படுகிறது.‌

மூளையின் சமநிலைக்காக பயன்படும் இந்த திரவம், இயல்பான நிலையில் இல்லாததிருந்தால் எமக்கு பாதிப்புகள் ஏற்படும். அதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

கண்களுக்கு பின்னால் உள்ள தலையில் கடுமையான வலி, இதய துடிப்பை போல் உங்களுடைய மூளையிலும் துடிப்பு ஏற்படுவதை உணர்தல், வாந்தி, குமட்டல், தலை சுற்றல், பார்வை திறன் இழப்பு, பக்கவாட்டில் பார்ப்பதில் தடுமாற்றம், கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய மூளையில் அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

மருத்துவர்களை சந்தித்தால் அவர்கள் கண் பார்வை திறன் குறித்த பரிசோதனை, மூளையின் அமைப்பு மற்றும் செயல் திறன் குறித்த எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை, முதுகு தண்டுவட பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.

பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் உங்களது மூளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானித்து, மருந்தியல் சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணம் வழங்குவர். வெகு சிலருக்கு மட்டும் பிரத்யேக சத்திர சிகிச்சைகள் மூலம் நிவாரணம் அளிப்பர்.

டொக்டர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53
news-image

இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2023-09-13 12:38:49
news-image

இரத்த சர்க்கரையின் அளவு தொடக்க நிலையில்...

2023-09-12 14:14:36