'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மார்கழி திங்கள்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இந்தத் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, இயக்குநர் சுசீந்திரன், அறிமுக நடிகர் ஷியாம் செல்வன், அறிமுக நடிகை ரக்ஷனா, அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்ரமணி, ஷர்மிளா, கோவை சாவித்ரி, நக்க்ஷா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியிலான காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான சுசீந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM