அறிமுக நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீரன்' எனும் திரைப்படம், 'சனாதன தர்மத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் படைப்பு' என அப்படத்தின் இயக்குநரான துரை கே. முருகன் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் துரை கே. முருகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சீரன்'. இதில் ஜேம்ஸ் கார்த்திக், 'லவ் டுடே' புகழ் ஆஜீத் காலீஹ், 'ஆடுகளம்' நரேன், ஆரியன், சென்றாயன், சூப்பர் குட் சுப்பிரமணி, சோனியா அகர்வால், அருந்ததி நாயர், இனியா, கிரிஷா குரூப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அரவிந்த் ஜெரால்ட், சசிதரன் மற்றும் ஜூபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சாதிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த திரைப்படத்தை நெட்கோ ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான ஜேம்ஸ் கார்த்திக் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
அவரே கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதி இருக்கிறார். தற்போது தொழிலதிபராக இருக்கும் அவர், தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலகட்டத்தில் ஆதிக்க சாதியினரால் சாதிய வன்கொடுமைக்கு ஆளானார்.
அதனை அவர் ஒரு படைப்பாக உருவாக்க வேண்டும் என்று விரும்பியதும்.. எனக்கும் அதன் மீதான ஈர்ப்பு இருந்ததால் இப்படத்தினை இயக்கினேன்.
காதல், சென்டிமெண்ட், எக்சன், பாடல்கள் என கொமர்ஷல் அம்சங்கள் இருந்தாலும்.. அதையும் கடந்து மக்களுக்கு தேவையான ஒரு விடயத்தையும் பதிவு செய்திருக்கிறோம்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் பேசு பொருளாக திகழும் சனாதன தர்மம் குறித்தும், அது உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் இப்படைப்பு உருவாகி இருக்கிறது'' என்றார்.
இதனிடையே இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள்.. தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டான ஒடுக்கப்பட்ட சாதியைப் பற்றிய காட்சிகளாக இடம் பெற்றிருப்பதால், இப்படமும் சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பி வணிக ரீதியாக வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM