பழகும்போது மிகவும் அன்பாக நடந்துகொண்ட தனுஸ்க பின்னர் மிருகம்போல மாறினார்- அவுஸ்திரேலிய நீதிமன்றில் பெண் தகவல்
தனுஸ்க குணதிலகவிற்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கு இன்று தொடர்ந்தும் இரண்டாவது நாளாக இடம்பெற்றவேளை பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்விட்டு அழுததுடன் பாலியல் உறவின் போது தனுஸ்க மிருகம் போல நடந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டபெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள -குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள தனுஸ்க குணதிலக டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
2022 ம் திகதி நவம்பர் இரண்டாம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுகின்றன-பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டவேளை தனுஸ்க குணதிலக ஆணுறையை பெண்ணின் விருப்பம் இல்லாமல் அகற்றினார் என்பதே முக்கிய குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.
இருவரும்; ஒபேரா மதுபானசாலையில் முதலில் சந்தித்துள்ளனர் - இருவரும் கட்டித்தழுவுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.மது அருந்திய பின்னர் இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இன்று வீடியோமூலம் சாட்சி வழங்கியவேளை அந்த பெண் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
அவர் எனது கழுத்தை நெரித்தவேளை நான் எனது உயிருக்கு ஆபத்து என அஞ்சினேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் மோசமாக ஏதோ நடந்தது என அந்த பெண் தனது நண்பிக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என அரசசட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.
நான் அனைத்து பிழைகளையும் செய்தேன் என நீங்கள் தெரிவிக்ககூடும்,நாங்கள் சந்தித்தவேளை அவர் மிகவும் அழகானவராக காணப்பட்டார் ஆனால் நாங்கள் பாலியல் உறவுகொள்ள ஆரம்பித்தவேளை தீடிரென அவர் ஏதோமாற்றமடைந்தவராக காணப்பட்டார் மிகவும் வன்முறை குணம் கொண்டவராக காணப்பட்டார் என அந்த பெண் குறிப்பிட்ட குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற குறுஞ்செய்தியை தனது மற்றுமொரு நண்பருக்கும் அந்த பெண் அனுப்பியுள்ளார் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
அவர் என்மீது இருந்தார் சில சந்தர்ப்பங்களில் என்னால்மூச்சுவிடக்கூடமுடியவில்லை,படுக்கை அறைக்கு சென்றவுடன் அவர் ஒரு வித்தியாசமான மனிதராக மிருகமாக மாறினார் என அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM