மலையாளத் திரையுலகின் சுப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' எனும் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இப்படத்தில் மோகன்லால், சோனலாலீ குல்கர்னி, ஹரீஷ் பெரடி, டேனீஷ் சயீத், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, ஹரி பிரசாந்த் வர்மா, கதா நந்தி, சஞ்சனா சந்திரன், சுசீத்ரா நாயர், ராஜீவ் பிள்ளை ஆகியோருடன் ஆன்ட்ரியா ரெவரா எனும் ஹொலிவுட் நடிகரும் நடித்திருக்கிறார்.
திரைக்கதையை பி. எஸ். ரஃபீக் எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கிறார். ரியாடீக் எக்சன் எண்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் & மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலக முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகியிருக்கும் ‘மலைகோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு திகதி, அப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்தநாளன்று, அப்படத்தின் நாயகனான மோகன் லால் அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM