தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களில் நம்பிக்கைக்குரிய நடிகரான விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'சாரா' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சாரா'. இதில் விஜய் விஷ்வா, சாக்ஷி அகர்வால், பொன்வண்ணன், அம்பிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜே. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை விஷ்வா ட்ரீம் வேர்ல்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். விஜயலட்சுமி, செல்லம்மாள்- குருசாமி. ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா இசை ஞானி இளையராஜாவின் இசை அரங்கத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' கட்டுமானங்களின் பணிகள் நடைபெறும் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் நாயகியான சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு புள்ளியில் நண்பனை காப்பாற்றுவதா? அல்லது காதலனை காப்பாற்றுவதா? என்ற நெருக்கடியான சூழல் வருகிறது. அந்த சூழலில் எம்மாதிரியான முடிவை நாயகி சாக்ஷி அகர்வால் எடுக்கிறார்? அதன் பின்னணி என்ன? என்பதனை விறுவிறுப்பாக விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM