வாழ்வாதார வழிகளற்று, மிகக்கூடிய இடர்பாடுகளுள் வாழ்ந்துவரும் மூன்று சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட நான்கு குடும்பங்களுக்கு, கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஊடாக அண்மையில் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வுதவி வழங்கலை மேற்கோள் காட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற போதும், எமது மக்களின் நலனோம்புகையில் உயர் கரிசனை கொண்ட செந்தில்குமரன் அவர்களது ஏற்பாட்டில், ஆடி அமாவாசை தினத்தன்று, கனடா கந்தசுவாமி ஆலயத்தில், செந்தில்குமரன் நிவாரண நிதியத்தால் சேகரிக்கப்பட்ட நிதி பொருண்மியம் நலிவுற்ற நிலையிலுள்ள மூன்று சிறுநீரக நோயாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் சிவகுமார் என்பவருக்கு எண்ணெய் ஊற்றும் இயந்திரக் கொள்வனவுக்காக மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாவும், நாகன் ஸ்ரீபத்மராசா என்பவருக்கு மா அரைக்கும் இயந்திரக் கொள்வனவுக்காக இரண்டு இலட்சத்து ஐம்பத்தையாயிரம் ரூபாவும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.தர்சினி இராசரத்தினம் என்பவருக்கு மருத்துவத் தேவை கருதி மூன்று இலட்சத்து அறுபத்தெட்டாயிரம் ரூபாவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமியான செல்வி.விஜிதா மோகனதாஸ் அவர்களின் நோய்நிலைமை கருதி அவரது குடும்பத்தினருக்கு, கறவைப் பசுமாடு கொள்வனவு, மாட்டுக் கொட்டகை அமைத்தல் என்பவற்றுக்காக இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகமெங்கும் உள்ள வைத்திய நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, சரியான நோயாளிகளை இனம் கண்டு பல கோடி ரூபாய் செலவில் நூற்றுக்கும் மேற்பட்ட இதய சத்திர சிகிச்சைகள், சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்கள், புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவி, வைத்தியசாலைகளின் அடிப்படைக் கட்டுமானங்கள் என எல்லாவகை உதவித்திட்டங்களையும் வழங்கிவைக்கும் செந்தில்குமரன் போன்றோர் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கொடை என்றே நான் கருதுகிறேன்.
இந்த அடிப்படையில் நலிந்தோரைத் நாடிச் சென்று, அவர்களது தேவையறிந்து சேவை செய்யும். செந்தில்குமரனின் பணி என்றென்றும் தொடர்வதற்கு, எல்லோரும் இணைந்து அவரது கரங்களைப் பலப்படுத்துவோம் என்றார்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில், இவரது நிதியேற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இருதய நோய்ப்பிரிவு அண்மையில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM