விசா இன்றி குவைத்தில் நீண்டகாலமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் இவ்வாறு வந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி குவைத்திலிருந்து 33 இலங்கையர்கள் நாடடுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவர்.
அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் நாட்டுக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்காக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் சுமார் 2000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM