கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே காரணம் என கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உயர்மட்டத்தில் கரிசனைகளை பரிமாறிக்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா கனடாவும் பைவ்ஐஸ் உடன்படிக்கை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.
எனினும் கனடாவின் சந்தேகம் குறித்து ஜி20 மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் சென்றவேளை அவுஸ்திரேலியாவிற்கு தெரியுமா என்பதை அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
கனடாவில் இந்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் ஒருவர் கொல்லப்பட்டுள்ள விவகாரம் அவுஸ்திரேலிய இந்திய வர்த்தக உறவுகள் வேகமாக வலுவடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம்உள்ளதாக விசாரணைகள் இடம்பெறுவது குறித்து அவுஸ்திரேலிய ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்அனைத்து நாடுகளும் இறைமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய கருதுவதாக தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி சகாக்களுடன் நாங்கள் நெருக்கமான ஈடுபாடுகளை கொண்டுள்ளோம் எங்கள் கரிசனைகளை உயர்மட்டத்தில் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சமூகத்தினர் சிலருக்கு இந்த தகவல் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் என்பது குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM