(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஒட்டுமொத்த மக்களும் கிரிக்கெட் விளையாட்டை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆகவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிதி நிலைமை குறித்து கணக்காளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் தற்போதை வீழ்ச்சி நிலையை சுட்டிக்காட்டி அண்மையில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தினோம்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடர்பில் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஏற்றுக்கொண்டார். அத்துடன் கிரிக்கெட் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீது நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கணக்காளர் நாயகம் தனது இறுதி அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஏற்றுக்கொண்டதால் அவரை பதவி விலகுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அழுத்தம் பிரயோகித்துள்ளார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் நாட்டை இல்லாதொழித்துள்ளதை போன்று கிரிக்கெட் விளையாட்டையும் சீரழித்துள்ளது. ஆகவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM