அவுஸ்ரேலியாவிற்கு அனுப்புவதாக ஆசிரியரிடம் பண மோசடி ; நபரொருவர் கைது

Published By: Digital Desk 3

19 Sep, 2023 | 11:47 AM
image

அவுஸ்ரேலியாவிற்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்சம்  ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், " அவுஸ்ரேலியா செல்ல விருப்பமா ? " என வந்த விளம்பரத்தை விளம்பரத்தை நம்பி, அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் உரையாடியுள்ளார். 

அவர்களும் நம்பிக்கை தரும் வகையில் உரையாடி , ஆசிரியரிடம் இருந்து கட்டம் கட்டமாக 75 இலட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். 

நீண்ட நாட்களாக தனது அவுஸ்ரேலியா பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், சந்தேகம் அடைந்த ஆசிரியர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறையிட்டார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கொழும்பைச் சேர்ந்த நபரை கைது செய்து, யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளின் பின்னர், நேற்று திங்கட்கிழமை (18) நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

அதேவேளை, குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் குறிப்பிட்ட வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையால்...

2023-09-25 09:05:35
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19