பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த “சக்வல” நிகழ்ச்சித் திட்டம்

Published By: Vishnu

19 Sep, 2023 | 11:51 AM
image

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள், காலணிகள், உணவுகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய நெருக்கடி நிலையில் வாழும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் பாடசாலைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் நடைபெறும் மேலதிக பாடநெறி நடவடிக்கைகள், வெளிக்கள நிகழ்வுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமது பிள்ளைகளுக்காக போக்குவரத்துக்கு அதிக பணத்தை செலவிட முடியாத நிலையில் உள்ளனர்.

குழந்தைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற சில நிகழ்வுகளுக்கு அனுப்ப முடியாமல் போகும் நிலை ஏற்படும் போது அக்குழந்தைகளின் திறமை மூடி மறைக்கப்படுவதோடு அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இழந்துபோகின்றனர்.

எனவே அத்தகையதொரு பாடசாலையொன்றுக்கு புதிய பேருந்து பரிசாக கிடைத்திருப்பது, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

தங்கள் அன்புக்குரிய குழந்தைகளுக்கு பெரும்பாலும் அவர்கள் இதுவரை அடைய முடியாத செயல்களில் பங்கேற்க ஒரு புதிய உலக வாய்ப்பைத் திறப்பதற்கான வழிமுறையாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள்.

பெற்றோரும் ஆசிரியர்களும் ஒன்றுகூடி ஒரு கொட்டகையைக் அமைத்து, அதைப் பாதுகாக்கிறார்கள். கனரக வாகன உரிமம் பெற்ற தந்தைமார் பேருந்தை ஓட்ட முன்வந்துள்ளனர். மெக்கானிக்குகளாக இருக்கும் பெற்றோர்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்பார்வையிட முன்வருகிறார்கள்.

ஆகஸ்ட் 27, 2023 அன்று, மினுவாங்கொட ரெஜி ரணதுங்க கல்லூரி மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கு புத்தம் புதிய பேருந்து ஒன்றைப் பரிசாகப் பெற்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் “சக்வல” நிகழ்ச்சியின் ஊடாக இந்த பரிசு கிடைத்துள்ளது.

சக்வல என்பது சஜித் பிரேமதாசவின் ஒரு முன்முயற்சியாகும், இது இலங்கையில் பாடசாலைகள் மற்றும் பள்ளி மாணவர்களை டிஜிட்டல் புரட்சிக்கு ஆயத்தம் செய்வதற்காக ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் கணினிகள் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும். ‘சக்வல” தேவைப்படும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்கவும் ஏற்பாடு செய்கிறது.

இலங்கையின் எதிர்கால கல்வியில் முதலீடு செய்து, சமூகத்தின் அனைத்து தரப்பு குழந்தைகளையும் வலுவூட்டும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரெஜி ரணதுங்க கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பேருந்தானது சக்வல நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை ஒன்றிற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட எழுபத்தி ஆறாவது (76) பேருந்தாகும்.

"இலங்கையை வழிநடத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் சஜித் பிரேமதாசவின் திறனைப் பற்றி நம்பிக்கை கொண்ட சர்வதேச மற்றும் தேசிய நன்கொடையாளர்களால் இந்த பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன" என்று அண்மையில் ஒரு பேருந்தின் நன்கொடையாளர் தெரிவித்தார்.

நன்கொடை செயல்முறை வெளிப்படையானது மற்றும் நடுத்தரமானது என்றும் அவர் விளக்கினார்.

“பாடசாலை சமூகத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிசை வரவேற்றனர். மதப் பிரமுகர்களால் ஆசீர்வதிக்கப்படுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தார்கள் மற்றும் அதை உத்தியோகபூர்வமாகப் பெறுவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு பிரேமதாசாவை அழைத்தனர்," என்றும் அவர் விளக்கினார்.

இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், வறுமையில் வாடும் குடும்பங்களில் இருந்து வரும் பிரகாசமான இளம் பிள்ளைகள் சக்வல திட்டத்தின் மூலம் தங்கள் திறமைகளை மேம்ப்படுத்தவும், இளம் தலைவர்களாக உருவெடுக்கவும் இது கைகொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44
news-image

மன்னாரில் 39வது தேசிய மீலாதுன் நபி...

2023-09-22 18:54:26
news-image

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை -...

2023-09-22 18:44:14
news-image

பாடசாலை மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் பற்றிய...

2023-09-22 16:13:53