சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டுவந்த இரு வர்த்தகர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் திங்கட்கிழமை (18) கைதுசெய்துள்ளனர்.
சுமார் 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியாக 45, 400 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த பெண்ணும் மற்றையவர் கல்முனையைச் சேர்ந்த ஆணும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் அடிக்கடி விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவரும் துபாயிலிருந்து GF-144 என்ற கல்ஃப் எயார் விமானத்தில் நேற்றுக்காலை காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
227 சிகரெட் கார்ட்டூன்களை பயணப்பொதியில் மறைத்து வைத்திருந்த போதே சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, ஆண் நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பெண் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM