இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் aukus உடன்படிக்கையை இராணுவகூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது தேவையற்றது இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது மூலோபாய தவறு அவர்கள் தவறிழைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டணி ஒரேயொரு நாட்டை மாத்திரம் இலக்காக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கின் சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்டின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2021 இல் உருவாக்கப்பட்ட அவுக்கஸ் அமைப்பினை அதன் உறுப்புநாடுகள் அணுவாயுத நீர் மூழ்கி தொடர்பான தகவல் தொழில்நுட்பங்களை பரிமாறுவதற்கான -செயற்கை நுண்ணறிவு குவான்டம் தொழில்நுட்பம் கடலுக்கடியிலான தொழில்நுட்பங்களை பரிமாறுவதற்கான பாதுகாப்புகூட்;டு என தெரிவித்துள்ளன.
இதேவேளை ஆசியபசுபிக் என தெரிவிக்கப்படுவதை சிரித்தபடி நிராகரித்துள்ள ரணில்விக்கிரமசிங்க அதனை செயற்கையான கட்டமைப்பு என தெரிவித்துள்ளார்.
எவருக்கும் இந்தோ பசுபிக் என்றால் என்னவென தெரியாது சிலருக்கு இந்தோ பசுபிக் இந்தியாவின் மேற்கு பக்கத்தில் முடிவடைகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள ரணில்விக்கிரமசிங்க சிலர் இதனை ஆபிரிக்கா என்கின்றனர் சிலர் தென் பசுபிக் என்கின்றனர் சிலர் மேற்கு பசுபிக்என்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனஅமெரிக்க மோதல் மேற்கு பசுபிக்கில் உருவானது தற்போது அது இந்து சமுத்திரத்திற்கும் தெற்குபசுபிக்கிற்கும் பரவியுள்ளது எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஏன் இதற்குள் இழுபடுகின்றோம் இதனை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தனது நீண்டகால அரசியல் வரலாற்றில் பல புவிசார் அரசியல் கூட்டமைப்புகள் மாறியுள்ளதை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்ட மோதல் இடம்பெறுகின்றது -அது ஆசியாவில் இடம்பெறுகின்றது இது சீனா எதிர் அமெரிக்கா மோதல் ஆசியாவில் தங்கள் செல்வாக்கை எவ்வாறு பிரித்துக்கொள்வது என்பது குறித்து அவர்கள் மோதுகின்றனர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் நேட்டோவின் விஸ்தரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திரத்தை பொறுத்தவரை நாங்கள் இராணுவ நடவடிக்கைகள் எவற்றையும் விரும்பவில்லை பிராந்தியத்தில் பல நாடுகள் நேட்டோவை தங்கள் அருகில் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து மேற்குலகிற்கு எதுவும் தெரியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM