கனடாவில் சீக்கிய மதசெயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கமே உள்ளது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூன் மாதம் 18ம் திகதி நிஜார் பிரிட்டிஸ்கொலம்பியாவில் சீக்கிய ஆலயத்திற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்த விடயம் குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கனடா பிரஜையின் கொலையில் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியாது இது எங்கள் இறைமையை மீறும் செயல் என கனடா பிரதமர் பொதுச்சபையில் தெரிவித்துள்ளார்.
இது சுதந்திரமான வெளிப்படையான ஜனநாய சமூகங்கள் செயற்படும் விதத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கும் இந்திய முகவர்களுக்கும் தொடர்புள்ளதாக கிடைத்த நம்பதகுந்த குற்றச்சாட்டுகளை கனடாவின் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர்-எங்கள் அரசாங்கம் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகயையும் எடுக்கும் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்தியாவின் சிரேஸ்ட இராஜதந்திரியொருவரை கனடா தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது.
கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி இதனை உறுதி செய்துள்ளார்.
கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய இராஜதந்திரி அங்குள்ள இந்திய புலனாய்வு பிரிவின் தலைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM