பலப்பிட்டிய பகுதியில் ரயில் மோதியதில் வயோதிபப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயில் மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இவர் பலப்பிட்டிய - ஹீனடிய பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோனைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.