Fems H.E.R. மையத்தினால் இலங்கையின் பெண்களுக்கு தடங்கலற்ற பயணத்தை தொடர வலுவூட்டல் 

Published By: Vishnu

18 Sep, 2023 | 07:45 PM
image

மாற்றத்தின் சக்தி வாய்ந்த முகவர்களாக பெண்கள் அமைந்திருப்பார்கள். எவ்வாறாயினும், தமது இல்லங்களிலும் சமூகங்களிலும் சமத்துவத்துடன் கூடிய தீர்மானமெடுப்போராக அவர்களை பங்கேற்கச் செய்வதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்த அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கும் சுபீட்சமான எதிர்காலத்துக்கும் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கி அதனூடாக பயன்பெறச் செய்வது என்பது கட்டாயமானதாகும். முன்னணி பெண்கள் மாதவிடாய் தூய்மை பராமரிப்பு வர்த்தக நாமமான ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் வழங்கும் Fems, பெண்களுக்கு எப்போதும் தாம் தெரிவு செய்யும் துறைகளில் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு ஊக்கமளிப்புகளை வழங்கியுள்ளது.

தமக்கும் சமூகத்துக்கும் சிறந்த எதிர்காலங்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு பெண்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பை கவனத்தில் கொண்டு, ‘H.E.R மையம்” (Help. Empower. Rise) என்பதை அறிமுகம் செய்வதனூடாக பெண்களுக்கான முன்னேற்றத்தை துரிதப்படுத்த முன்வந்துள்ளது.

ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் மாதவிடாய் தூய்மையில் அக்கறை கொள்ளும் முன்னணி வர்த்தக நாமமான Fems, பெண்களின் வளர்ச்சிக்கு வலுவூட்டி, சமூக தடங்கல்களுக்கு அப்பால் கனவு காண்பதற்கு ஆதரவளித்து வருகின்றது.

பெண்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை தேவைகளை நிவர்த்தி செய்வதில் எமது அர்ப்பணிப்பின் இயற்கையான நீடிப்பாக H.E.R. மையம் அமைந்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தல், சமூகங்களுக்கு கற்பித்தல் மற்றும் பல்வேறு தடைகளை கடந்து முன்னேறல் தொடர்பில் தீர்வுகளையும் வளங்களையும் வழங்குகின்றது.” என்றார். 

H.E.R. மையம் என்பது இலங்கையின் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாக அமைந்திருப்பதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக தூய்மை செயன்முறைகள் தொடர்பில் அறிவூட்டி, மாதவிடாய் தூய்மை துவாய்களை அணுகச் செய்வதை மேம்படுத்தி அவர்களின் தடங்கலில்லாத பயணத்துக்கு வலுவூட்டுகின்றது.

Help, Empower மற்றும் Rise எனும் மூன்று அம்சங்களின் பிரகாரம் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன. வாழ்க்கையின் சகல பாகங்களையும் சேர்ந்த பெண்களுக்கு உள்ளடக்கமான சமூகத்தை ஏற்படுத்தவும், வலுவூட்டவும் முன்வந்துள்ளது. 

Help எனும் பிரிவினூடாக, சகாயத்தன்மை மற்றும் பெற்றுக் கொள்ளும் தன்மை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. போதியளவு அறிவின்மை மற்றும் சகாயத்தன்மை இன்மை போன்றவற்றினால் நாட்டின் சுமார் 70% பெண்களுக்கு மாதவிடாய் தூய்மை துவாய்களை ஒழுங்கீனமாக அணுகும் நிலை நிலவியது.

எனவே 2022 ஆம் ஆண்டில் Fems இனால் ‘AYA’ எனும் முன்னணி சிக்கனமான மாதவிடாய் தூய்மை துவாய் சிறந்த தரங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பெண்ணினாலும் அணுகக்கூடிய நிலையில் ‘AYA’ துவாய்கள் கிடைப்பதை இந்த அமைப்பு உறுதி செய்தது. அதனூடாக பெண்களுக்கு தமது மாதவிடாயை இலகுவாக எதிர்கொள்ள உதவியது. இதுவரையில் நாடு முழுவதையும் சேர்ந்த 270,000 க்கும் அதிகமான இல்லங்களுக்கு ‘Aya’ அணுகக்கூடியதாக அமைந்துள்ளது.

Empower எனும் பிரிவில், தூய்மையான தயாரிப்புகளின் தடங்கலின்றிய கிடைப்பனவு மற்றும் திறந்த கலந்துரையாடல்கள் போன்றன அடங்கியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் மாதவிடாய் தூய்மை துவாய்களை அறிமுகம் செய்வதனூடாக, பெண்களுக்கு தமது தினசரி செயற்பாடுகளை எவ்விதமான கஷ்டங்களுமின்றி மேற்கொள்ள Fems வலுவூட்டுகின்றது. தனது பாடசாலை மற்றும் நிறுவனங்களுக்கான கல்வியூட்டல் நிகழ்ச்சிகளினூடாக சிறந்த மாதவிடாய் தூய்மை செயன்முறைகள் தொடர்பில் 125,000 க்கு அதிகமான பெண்களுக்கு Fems விழிப்புணர்வூட்டியுள்ளது. 

Rise எனும் பிரிவில் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தல் மற்றும் பாலின முறைமைகளை சவால்களுக்கு உட்படுத்தல் போன்ற மேற்கொள்ளப்படுவதுடன், பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த பெண்களின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது. 

தாக்கத்தை மேம்படுத்தவும், செல்வாக்குச் செலுத்தலை பரவலடையச் செய்யவும் H.E.R. மையம், பெண்களுக்கு வலுவூட்டும் எனும் பொதுவான சிந்தனையைக் கொண்ட கொண்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தாக்கம் செலுத்துவோருடன் கைகோர்த்துள்ளது. H.E.R மையம் தற்போது சர்வோதய பெண்கள் அமைப்பு, Fusion, Arka Initiative மற்றும் MJF தொண்டு மையம் ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளது.  

செயற்பாட்டுக்கான அழைப்பு தெளிவாக உள்ளது: மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளவர்களை H.E.R. மையம் வரவேற்கின்றது. எதிர்காலத்தில் அமைப்புகளுடன் பங்காண்மைகளை கட்டியெழுப்பல், மாற்றத்தை வழிநடத்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்கான காரணிகளை முன்னெடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள மையம் எதிர்பார்க்கின்றது. அதனூடாக, கலாசாரம் மற்றும் தலைமுறைகளுக்கு அப்பாலான தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, https://herfoundation.lk/ பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்