திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்

Published By: Vishnu

18 Sep, 2023 | 08:01 PM
image

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் கரடி தாக்கியதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனில் திங்கட்கிழமை (18) காலை 10 மணியளவில் விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் சென்ற வேளை கரடி தாக்கியுள்ளதுடன் முகம், கண்கள், கைகள் போன்றவற்றில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கரடி தாக்கியவர் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் தனராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:28:26
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41