மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழு : உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

Published By: Vishnu

18 Sep, 2023 | 05:29 PM
image

(நமது நிருபர்)

மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றின் பிரதான கணக்கீட்டு அலுவரினால் செய்யப்பட்ட ஒரு தீர்மானம் மூலம் இன்னலுறும் எவரேனும் அத்தகைய தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கூடிய குழு 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்படவுள்ள மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவாகும்.

அதற்கமைய கணக்காய்வு,சட்டம் மற்றும் அரசாங்க நிதி முகாமைத்துவம்,பொது நிர்வாகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அனுபவமுடையவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க முடியும். தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலங்கை அரச கணக்காய்வுச் சேவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

அதற்கமைய இதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2023 ஒக்டோபர் 09 அன்று அல்லது அதற்கு முன்னர் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர்நாயகம் இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அல்லது அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலாயின் அதன் விடயமாக, 'அரசியலமைப்புப் பேரவை: மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழு' எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41