அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் இயன் பிரைஸ் என்பவர் கடந்த வியாழக்கிழமை (14) தனது வயதான தாயைப் பாதுகாக்க முயன்றபோது இரண்டு அமெரிக்க எக்ஸ்.எல். புல்லி இன நாய்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இறந்தார். குறித்த நபதை நாய் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் கடுமையாக கடித்துக் குதறியுள்ளது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த இனத்தை தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்துள்ளார்.
இது இங்கிலாந்தில் முதல் முறை இடம்பெற்ற சம்பவமொன்று அல்ல என்றும் அமெரிக்க எக்ஸ்.எல். புல்லி நாய் கடித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பிரதமர் சுனக் தெரிவித்துள்ளார்.
நாய்கள் முறையான பயிற்சி பெறாததால் மக்களை கடித்ததாக கூற முடியாது ஏனெனில் அமெரிக்க எக்ஸ்.எல். புல்லி இன நாய்கள் உண்மையிலேயே கொடிய இனம் என்பதால் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுனக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் தடை அமுலுக்கு வருவதால் அமெரிக்க எக்ஸ்.எல். புல்லி இன நாய்களின் புதிய இனப்பெருக்கம் சாத்தியமில்லை எனவும் ஏற்கனவே உள்ள இனங்கள் அழிக்கப்படாது எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM