கேள்விக்குறியாகும் சுகாதாரத்துறை

18 Sep, 2023 | 05:18 PM
image

துரைசாமி நடராஜா

பெருந்­தோட்ட மக்கள் பல்­வேறு துறை­க­ளிலும் பின்­தங்­கிய வெளிப்­பா­டு­களைக் கொண்­டுள்­ளமை தெரிந்­த­தாகும். இவற்றுள் சுகா­தா­ரத்­துறை குறிப்­பி­டத்­தக்க ஒன்­றாக விளங்­கு­கின்­றது.

பெருந்­தோட்ட சுகா­தார நிலை­மைகள் நீண்ட கால­மா­கவே திருப்­தி­யற்ற வெளிப்­பா­டு­களை பிர­தி­ப­லிக்­கின்­றன. இத்­து­றையின் அபி­வி­ருத்தி கருதி அவ்­வப்­போது சிற்­சில முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும் உரிய சாதக விளை­வுகள் இன்னும் கிடைப்­ப­தாக இல்லை. 

தோட்­டப்­புற வைத்­தி­ய­சா­லை­களும் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் இயங்கி வரு­கின்ற ஒரு போக்கு காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் தோட்­டப்­புற வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று சிறப்­பான சுகா­தார சேவை­களை மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தியிருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஒரு சமூகம் திட­காத்­தி­ர­மான சமூ­க­மாக உரு­வெ­டுப்­பதால் சாதக விளை­வுகள் பல­வற்­றையும் பெற்றுக்கொள்­வ­தற்கு அது உந்­து­சக்­தி­யாக அமையும் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்த வகையில் திட­காத்­தி­ர­மான சமூக உரு­வாக்­கத்­திற்கு அடித்­த­ள­மாக சுகா­தா­ரத்­துறை விளங்­கு­கின்­றது என்றால் மிகை­யா­காது. 

எனினும் பெருந்­தோட்ட மக்கள் சிறந்த சுகா­தார சேவை­யினைப் பெற்றுக்கொள்­வ­தென்­பது இன்னும் எட்­டாக்­க­னி­யா­கவே இருந்து வரு­கின்­றது. 

19ஆம் நூற்­றாண்டில் இம்­மக்கள் இலங்­கையில் காலடி எடுத்து வைத்த காலந்­தொட்டே சுகா­தார நிலை­மைகள் அபி­வி­ருத்தி போக்­கினை வெளிப்­ப­டுத்­தாது பின்­தங்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றமை தொடர்பில் பலரும் தமது விச­னப்­பார்­வை­யினை செலுத்தி வரு­கின்­றனர்.

பிரித்­தா­னிய கால­னித்­து­வத்தின் போது பெருந்­தோட்­டத்­துறை மக்­களின் சுகா­தார வச­திகள் அனைத்தும் ஆங்­கி­லேய பெருந்­தோட்ட செய்­கை­யா­ளர்­களால் பொறுப்­பேற்­கப்­பட்­டி­ருந்­தன. ஆயினும் குடிப்­பெ­யர்வின் பின்­ன­ரான ஆரம்பக்கட்ட பெருந்­தோட்ட வாழ்க்­கையில் இம்­மக்­களின் சுகா­தார நிலை­மைகள் மிகவும் இழி­வா­ன­தாகக் காணப்­பட்ட நிலையில், பிரித்­தா­னிய பெருந்­தோட்ட செய்­கை­யா­ளர்கள் தவிர்ந்த சில நிறு­வ­னங்­களும் இவர்­க­ளது சுகா­தார நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பங்­க­ளிப்­புக்­களை வழங்­கின. 

முக்­கி­ய­மாக நோயுற்ற நிலை­யி­லி­ருந்த அநே­க­மான தொழி­லா­ளர்கள் பிரித்­தா­னிய பெருந்­தோட்ட செய்­கை­யா­ளர்­களால் கவ­னிக்­கப்­ப­டா­மை­யாலும், மிகவும் கடு­மை­யாக நடத்­தப்­பட்­ட­மை­யாலும் கண்­டியில் இயங்கி வந்த friend in Need societyஇன் வைத்­தி­ய­சாலை அவர்­க­ளுக்­கான மருத்­துவ சிகிச்­சை­களை பார­பட்­ச­மின்றி வழங்­கி­ய­தாக 1965ஆம் ஆண்டு தக­வ­லொன்று வலி­யு­றுத்­து­கின்­றது. 

மேலும் 19ஆம் நூற்­றாண்டு காலப்­ப­கு­தியில் இவர்கள் மத்­தியில் காணப்­பட்ட சமூக, பொரு­ளா­தார கார­ணி­களும், இவர்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் பார­பட்­சங்­களும் இவர்­களின் சுகா­தார வாழ்க்­கையில் இன்னும் அதி­க­மான பாதிப்­புக்­களை கொண்டு வந்­தன. 

முக்­கி­ய­மாக தோட்­டங்­களில் இவர்­க­ளது உழைப்பு ஆங்­கி­லேய பெருந்­தோட்ட செய்­கை­யா­ளர்­களால் அள­வுக்­க­தி­க­மாக சுரண்­டப்­பட்­ட­மையும், அவர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற உணவு வகைகள் சுகா­தா­ர­மற்­ற­வை­யா­கவும், போஷாக்­கற்­ற­வை­யா­கவும் காணப்­பட்­ட­மையும் இவர்­க­ளது உடல்­நி­லையில் மேலும் பாதிப்­புக்­களைக் கொண்டு வந்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டல்கள் இருந்து வரு­கின்­றன.

பெருந்­தோட்ட மக்­களின் வேலைப்­பளு, அவர்­களின் நலன்­களைப் புறந்­தள்ளி உழைப்பை மட்­டுமே உறிஞ்­சு­கின்ற முத­லா­ளித்­து­வத்தின் போக்­குகள் என்­பன அம்­மக்­களை நோயா­ளர்­க­ளாக்கி சுகா­தாரத் தேவையை அதி­கப்­ப­டுத்­தி­யது. 

இந்­தியத் தமிழ் தொழி­லாளர்கள் இங்கு குடி­யேற்­றப்­பட்ட தோட்­டங்கள் தொலை­தூ­ரத்தில் அமைந்­தி­ருந்­தன. இதனால் இவர்கள் 'கிணற்றுத் தவ­ளை­போல' தோட்­டங்­க­ளுக்­குள்­ளேயே முடங்கிக் கிடக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டனர். அத்­தோடு இவர்­களின் பல்­வேறு தேவை­க­ளையும் தோட்­டங்­க­ளுக்­குள்­ளேயே பூர்த்தி செய்ய வேண்­டிய ஒரு நிலை காணப்­பட்­டது. 

வாட­கை­யற்ற குடி­யி­ருப்பு, இல­வச மருத்­துவ விநி­யோகம், வைத்­தி­ய­சாலை, பிர­சவ விடுதி, குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்கள் போன்ற வச­திகள் இவ்­வாறு செய்­து­கொ­டுக்­கப்­பட்ட வச­தி­களுள் சில­வாகும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தோடு, எனினும் இவ்­வ­ச­திகள் ஒரு­போதும் ஆகக்­கு­றைந்த மட்­டத்­திற்கும் மேலாக இருக்­க­வில்லை என்­ப­தையும் கோடிட்டுக் காட்­டி­யுள்­ளனர்.

சட்­டங்கள் உரு­வாக்கம்

பெருந்­தோட்ட மக்கள் தொடர்ச்­சி­யா­கவே சுகா­தார ரீதி­யான சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இச்­ச­வால்­களைக் களைந்து சிறந்த சுகா­தார சேவை­யினை இம்­மக்­க­ளுக்­காக பெற்றுக்கொடுக்கும் நோக்கில் காலப்­போக்கில் சட்­டங்கள் பலவும் உரு­வாக்­கப்­பட்­டன. எனினும் இச்­சட்­டங்கள் எந்­த­ள­வுக்கு தொழி­லா­ளர்­களின் சுகா­தார மேம்­பாட்­டிற்கு வலு­வூட்­டின என்­பது குறித்து சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. 

ஆரம்ப காலத்தில் பெருந்­தோட்ட மக்கள் நோய்­வாய்ப்­படும் நிலை­மைகள் இங்கு அதி­க­ரித்துக்காணப்­பட்­டன. ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் வைத்­தி­ய­சா­லை­களில் இறக்கும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது. 

இந்­நி­லையில் தொழி­லா­ளர்கள் சுக­வீ­ன­முற்­றுள்ள காலப்­ப­கு­தியில் அவர்­க­ளுக்­கான இருப்­பி­ட­வ­சதி, உணவு, வைத்­திய வசதி போன்ற சில குறைந்­த­பட்ச வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தனை 1865ஆம் ஆண்டு சேவை ஒப்­பந்தச் சட்டம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

தொழி­லா­ளர்­களின் சமூக நல­னிற்கு தொழில் வழங்­கு­நரே பொறுப்­பா­கு­மென்று 1984ஆம் ஆண்டு 14ஆம் இலக்கச் சட்டம் விதித்­தது. தொழி­லா­ள­ரி­டையே காணப்­பட்ட உயர்ந்த இறப்பு விகி­தங்கள், உடல்­நலக் குறை­வுகள் என்­பன­வற்றை கவ­னத்திற் கொண்டு ஆகக்­கு­றைந்த மருத்­துவ வச­தி­க­ளா­வது தொழி­லா­ளர்­க­ளுக்கு செய்து கொடுக்­கப்­ப­டு­வதை இச்­சட்டம் வலி­யு­றுத்­தி­யது. சுகா­தார வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தையும் இச்­சட்டம் கட்­டா­ய­மாக்கியிருந்­தது. 

எனினும் தோட்ட முகா­மை­யா­ளர்கள் இச்­சட்­டத்தின் விதி­களை அமு­லாக்­கு­வதில் உரிய கரி­ச­னையை காட்டத் தவறியிருந்­தனர். இதனால் இச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்­திய பின்­னரும் தொழி­லா­ளர்­களின் இறப்பு விகி­தங்­களில் குறிப்­பி­டத்­தக்க வீழ்ச்சி நிலை­யினை அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

தொழி­லா­ள­ருக்­கான மருத்­துவ நலன் திட்­டங்­களை நிதிப்­ப­டுத்­து­வ­தற்கும், முகாமை செய்­வ­தற்கும் அர­சாங்­கமே பொறுப்­பா­கு­மென்று தோட்டக் கம்­ப­னிகள் தொடர்ச்­சி­யா­கவே வாதிட்டு வந்த நிலையில் 1880ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மருத்துவ தேவைகள் சட்­டத்தின் கீழ் இப்­பொ­றுப்பை அர­சாங்கம் ஏற்றுக்கொண்­டது. 

1912ஆம் ஆண்டு 9ஆம், 10ஆம் இலக்க மருத்­துவ உத­விச்­சட்­டங்கள் முக்­கி­யத்­துவமிக்­க­ன­வாக விளங்­கு­­கின்­றன. 

1912ஆம் ஆண்டு சட்டம் ஒரு வய­துக்கு குறைந்த பிள்­ளை­களின் முறை­யான பரா­ம­ரிப்பு, போஷாக்கு என்­பன­வற்­றிற்கு தோட்ட முகாமையாளரே பொறுப்பு என்­ப­தனை வலி­யு­றுத்­தி­யது. தோட்­டங்­களில் காணப்­படும் சுகா­தார வச­தி­க­ளையும், தோட்ட மக்­க­ளுக்­கான சமூ­க­நலன் வச­தி­க­ளையும் அர­சாங்க மாவட்ட வைத்­திய அதி­கா­ரிகள் மேற்­பார்வை செய்­வ­தற்கும் இச்­சட்டம் இட­ம­ளித்­தது. 

மேலும் தோட்­டங்­களில் மல­சலகூடங்­களை அமைப்­ப­தற்கும், வடிகால் அமைப்­புக்­களை திருத்­து­வ­தற்­கு­மான சட்­ட­வி­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கும் இச்­சட்டம் அனு­மதி வழங்­கி­யது. 1941ஆம் ஆண்டு பிர­சவ நன்­மைகள் சட்டம் தொழி­லாளர் நலன்­பேணும் மற்­றொரு சட்­ட­மாக விளங்­கு­கின்­றது.

ஆட்­சியிலிருந்த அர­சாங்­கங்கள் பல்­வேறு சமூ­க­நலன் திட்­டங்­களை அவ்­வப்­போது நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கி­வந்த போதும் தோட்ட மக்­களால் இந்த நன்­மை­களை பெற்­றுக்கொள்ள முடி­யா­த­வொரு நிலையே காணப்­பட்­டது.

சுகா­தாரம், மருத்­துவம் மற்றும் கல்வி உள்­ளிட்ட பல வேலைத்­திட்­டங்­களும் இதில் உள்­ள­டங்கும். சம­கா­லத்­திலும் கூட இந்த நிலை­மை­யினை எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது. தோட்­ட­மக்கள் தொடர்ச்­சி­யாக தோட்ட முகா­மைத்­து­வத்தின் பிடிக்குள் சிக்­குண்டு தங்­கி­யி­ருக்கும் நிலையில் அவர்­களின் நலன்கள் பலவும் மழுங்­க­டிப்­பிற்கு உள்­ளாகும் நிலையே மேலெ­ழுந்து காணப்­ப­டு­கின்­றது. 

இதே­வேளை தோட்­டங்கள் தேசிய மய­மாக்­கப்­பட்­டதன் பின்னர் தோட்ட மக்­க­ளுக்கு சமூ­க­நலன் சேவை­களை வழங்­கு­வதில் ஓர­ளவு அக்­கறை காணப்­பட்­ட­தாக புத்தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும்  இங்கு குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மாகும்.

இதே­வேளை தோட்­டப்­புற வைத்­தி­ய­சாலை­களை எடுத்துக்கொண்டால் அது தொழி­லா­ளர்­களின் சுகா­தார மேம்­பாட்­டிற்கு கை கொடுக்கும் ஒன்­றாக காணப்­பட­வில்லை. பயிற்­சி­ பெற்ற வைத்­தி­யர்கள், தேவை­யான மருந்து வகைகள், நோயா­ளர்­க­ளுக்­கான ஏனைய வச­திகள் என்­பன இங்கு பெரும்­பாலும் இல்­லாத ஒரு நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. 

பல தோட்­டங்­களில் வைத்­தி­ய­சா­லைகள் பெய­ர­ள­வி­லேயே இயங்­கி­வரும் நிலையில் தொழி­லா­ளர்­களின் துன்பம் இரட்­டிப்­பா­கி­யுள்­ளது. கஷ்ட மற்றும் அதி­கஷ்ட பிர­தே­சங்­களில் தொழி­லா­ளர்­களின் நிலை­மைகள் மிகவும் மோச­மா­கி­யுள்­ளன. இங்­குள்ள தோட்­டப்­புற வைத்­தி­ய­சா­லைகள் உரிய வச­தி­யின்றி காணப்­ப­டு­வதால் நோயா­ளர்­களை சிகிச்­சைக்­காக நகர்ப்­புற வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு அழைத்­துச்­செல்ல வேண்டியுள்­ளது. 

எனினும் நகர்ப்­புற வைத்­தி­ய­சா­லைகள் தொலை­தூ­ரத்தில் இருப்­ப­த­னாலும், பாதைச் சீர்­கேடு உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளி­னாலும் நோயா­ளர்­களை அழைத்துச் செல்­வது இல­கு­வான காரி­ய­மாக தென்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் பல தோட்­டங்­களில் நோயா­ளர்­களை அழைத்துச் செல்­வ­தற்­கான அம்­பி­யூலன்ஸ் வண்டி வச­திகள் காணப்­ப­டா­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை பெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்கும் வேலைத்­திட்டம் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தொழி­லா­ளர்­க­ளுக்கு சுகா­தார மற்றும் மருத்­துவ தேவை­களை உரி­ய­வாறு பெற்றுக்கொடுப்­பது இதன் நோக்­க­மாக இருந்­தது. எனினும் இந்­ந­ட­வ­டிக்கை முழு­மை­பெ­றாது சில வைத்­தி­ய­­சா­லை­களை மட்­டுமே அர­சாங்கம் பொறுப்­­பேற்றுக் கொண்டது. 

இந்நிலையில் நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்­டியதன் அவ­சியத்தை பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் பாராளு­மன்றத்தில் வலி­யுறுத்தியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 500 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.அதில் 44 வைத்தியசாலைகளை மாத்திரமே அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. 

கடந்த வருடத்தில் 59 வைத்தியசாலைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தும் இன்னும் அரசாங்கம் பொறுப்பேற்காதுள்ளது. இன்னும் தோட்ட மருத்துவ உதவியாளர்­­களிடமே தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் ஏனைய பிரதேசங்களைப் போன்று தோட்ட வைத்­­­தியசாலைகளை அபிவிருத்தி செய்து  எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள், தாதி­­­யர்கள் நிய­மிக்கப்பட வேண்டும் என்­றும் இராதா­­­கிருஷ்ணன் எம்.பி. கேட்டுக் கொண்­­­­டுள்­ளார். இக்கோரிக்கை வரவேற்­கத்தக்க­­தாகும்.

இந்நிலையில் தோட்­டப்­புற வைத்­தியசாலைகளை அரசாங்கம் உட­னடி­யாக பொறுப்பேற்று சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ சேவை­களை தொழி­லாளர்­களுக்கு பெற்றுக்கொடுக்க முன்­வர­வேண்டும். அத்தோடு இம்­மக்­களை தொடர்ந்தும் ‘மாற்றாந்தாய்­மனப்­பான்மை­யுடன்’ நோக்கு­வதை அரசாங்­கம் தவிர்ப்பதும் மிகவும் அவசிய­மாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right