ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து விசாரணைகள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளுக்கு பரிசா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மிககடுமையான மோதலை அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அப்படி நடக்கவில்லை,போட்டி சில மணிநேரங்களில் முடிந்தது என தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க அந்த தோல்வியை நான் வர்ணிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது வீரர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் இந்த தோல்விக்கும் அரசியலிற்கும் தொடர்புள்ளதா என்பதை கண்டறிவதற்கு விசாரணை அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இந்த தோல்வியால் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM