லிபியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள வெள்ளத்தில் முழுக்குடும்பம் உயிரிழந்துள்ள நிலையில் அந்த குடும்பத்தைசேர்ந்த11வயது சிறுவன் மாத்திரம் உயிர் தப்பியுள்ளான்.
இதனை அதிசயம் என வர்ணிக்க முடியும் என ஸ்கைநியுஸ் தெரிவித்துள்ளது.
டெர்னாவில் அந்த சிறுவனின் முழுக்குடும்பத்தையும் அடித்துச்சென்ற அலை அந்த சிறுவனை மாத்திரம் மீண்டும் கரைக்கு கொண்டுவந்து சேர்ந்துள்ளது.
அந்த சிறுவன் குறிப்பிடத்தக்க காயம் எதுவுமின்றிகாணப்படுகின்றான் காலில் சிறிய சிராய்ப்புகள்மாத்திரம்காணப்படுகின்றன
வெள்ள நீர் எங்களை உயரத்திற்கு தூக்கி மீண்டும் நிலத்தில் வீழ்த்தியதுஎன அந்தசிறுவன் தெரிவித்துள்ளான்.
நான் நிலத்தில் கண்விழித்தேன் அங்கிருந்து எழுந்து நடந்தேன் பின்னர் பொலிஸ் காரில் என்னை பாடசாலைக்கு கொண்டு சென்றார்கள் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
அந்த சிறுவனின் மன உணர்வு என்ன என நான் கேட்டேன் அவன் அதற்கு ஒன்றுமில்லை என பதிலளித்தான்.
அந்தசிறுவனின் உறவினரான முஸ்தபா பரஸ் தற்போது அவனின் பாதுகாவலராக காணப்படுகின்றார்
நாங்கள் 11 பேரை இழந்தோம் ஐந்து உடல்களை மாத்திரம் மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பொறியியலாளரான அவர் தடுத்திருக்க கூடிய இந்த துயரம் குறித்து கடும்சீற்றம் வெளியிட்டுள்ளார்.
1973 இல் கட்டப்பட்ட லிபிய அணை 50 வருடங்களாக பராமரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரத்திற்கு அலட்சியமும் ஊழலும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரழிவை சந்தித்துள்ள டெர்னாவின் பகுதியில் படையினர் மீட்பு பணிகளிற்கு தலைமை வகிக்கின்றனர்.
சிலவேளைகளில் அவர்களது நடவடிக்கைகள் சிறப்பானவையாக காணப்படுகின்றன
சிலவேளைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
முதல் நாள் பெருமளவு படையினரின் பிரசன்னம் காணப்படவில்லை.
அன்று காலை விடிந்ததும் ஆயிரக்கணக்கான உடல்கள் கரையொதுங்கின வெள்ள நிவாரண குழுவே நடவடிக்கையில் ஈடுபட்டது.
அந்த குழுவில் செம்பிறை சங்கத்தினர் பொலிஸார் இராணுவத்தினர் மருத்துவர்கள் ஆகிய பலர் காணப்பட்டனர்.
ஐரோப்பாவில் பேரழிவை ஏற்படுத்திய டானியல் புயல் அது மத்தியதரை கடலை கடந்தவேளை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர்.
நாங்கள் கடலில் இருந்து வரும் வெள்ளத்திற்கு தயாராகயிருந்தோம் ஆனால் பின்னாலிருந்த அணை உடைந்த வெள்ளமே பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என ஒருவர் தெரிவித்தார்.
முதல்நாள் காலை 1500 உடல்கள் கரையொதுங்கின- என தெரிவித்த அவர் நாங்கள் அனைவரும் கடற்கரைக்கு ஒடினோம் அது கிட்டத்தட்ட மங்கலாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM